நடப்பு ஆண்டின் முதல் 6 மாதத்தில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் – காஷ்மீர் போலீஸ்

terrorist attack
நடப்பு ஆண்டின் முதல் 6 மாதத்தில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் - காஷ்மீர் போலீஸ்

Terrorists killed: ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் திராப்கம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக நேற்று முன்தினம் பாதுகாப்புப் படைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதியை சுற்றிவளைத்து அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். சுமார் 10 மணி நேரத்திற்கும் கூடுதலாக நடந்த இந்த என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர என காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், நடப்பு ஆண்டின் முதல் 6 மாதங்களில் பாதுகாப்புப் படையினரின் அதிரடி நடவடிக்கைகளால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் எண்ணிக்கை 100 ஆகியுள்ளது.

இதுதொடர்பாக காஷ்மீர் போலீசார் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியதாவது: காஷ்மீரில் பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காக பாதுகாப்பு படை தொடர்ந்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. ஆனாலும், பயங்கரவாத அமைப்புகளின் ஊடுருவல் முயற்சி மற்றும் இளைஞர்களை பயங்கரவாதத்திற்கு இழுக்கும் செயலும் தொடருகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த 158 பயங்கரவாதிகள் இன்னும் உள்ளனர். அவர்களில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்க உறுப்பினர்கள் (83 பயங்கரவாதிகள்) அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இவர்கள் தவிர ஜெய்ஷ் பயங்கரவாதிகள் (30 பேர்) மற்றும் ஹிஜ்புல் முஜாகிதீன் இயக்க பயங்கரவாதிகள் (38 பேர்) உள்ளனர் என பதிவிட்டுள்ளனர்.

100 terrorists killed in J&K in 2022 so far

இதையும் படிங்க: Gold Coin: மரம் வளர்த்து பராமரித்தால் தங்க காசு – அமைச்சர் சேகர் பாபு