monkey pox : இந்தியாவில் மேலும் இருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு

தில்லி: One more person infected with monkey pox : இந்தியாவில் 5 பேருக்கு குரங்கு அம்மை தொற்று ஏற்பட்டு, அதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் இருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

குரங்கு அம்மை தொற்றும ஆப்ரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் (Abroad including Africa, America) பரவி வந்த நிலையில், அண்மைக்காலமாக இந்தியாவிலும் குரங்கு அம்மை தொற்றால் சிலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது தொடர்ந்து அதிகரித்து வருவதால், மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் குரங்கு அம்மையால் கேரளாவில் 3 பேர், தெலுங்கானாவில் ஒருவர், தில்லியில் ஒருவர் என 5 பேர் குரங்கு அம்மையால்பாதிக்கப்பட்டிருந்து உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் (One person died). அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளத்தைச் சேர்ந்த மற்றொருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் தில்லியில் வசிக்கும் நைஜீரியாவைச் சேர்ந்த 35 வயது நபர் (A 35-year-old man from Nigeria) ஒருவருக்கு குரங்கு அம்மைத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவர் அண்மையில் வெளிநாட்டிற்கு சென்று, திரும்பியதாக கூறப்படுகிறது. சந்தேகத்தின் பேரில் அவருக்கு பரிசோதனை செய்ததில் குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த 30 வயது நபருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக அளவில் குரங்கு அம்மை தொற்று வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் குரங்கு அம்மை பரவல் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து அங்கு குரங்கு அம்மைக்கு எதிரான அவசர நிலை (A state of emergency has been declared) அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெரு நாட்டில் (In Peru) குரங்கு அம்மை பாதிப்பால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்த நாட்டில் குரங்கு அம்மை பாதிப்பால் சுமார் 300 பேர் வரை ஏற்கெனவே இறந்துள்ளனர்.

கேரளாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட 22 வயதுடைய நபர், சனிக்கிழமை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுதான் இந்தியாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்துள்ள முதல் பலியாகும் (This is the first casualty).

இது குறித்து கேரளா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியது: கடந்த ஜூலை 22-ஆம் தேதி வளைகுடா நாட்டிலிருந்து இந்தியாவிற்கு திரும்பிய கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த‌ 22 வயது நபரை பரிசோதனை செய்ததில் அவருக்கு குரங்கு அம்மை (Monkey pox) பாதிப்பு உள்ளது உறுதியானது. இதனைத் தொடர்ந்து அவரை ஜூலை 27-ஆம் தேதி மருத்துவமனையில் தனிமை படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

நாட்டில் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களுக்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களின்படி, குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட நபர் 21 நாட்களுக்கு (21 days) தனிமைப் படுத்தப்பட வேண்டும்.

குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் (Wearing face mask is mandatory), கைகளின் தூய்மைக்கு முன்னுரிமை அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனுடன், உடலின் அனைத்து காயங்களையும் துணியால் மூட வேண்டும் என்றும், காயம் முழுமையாக குணமாகும் வரை யாரிடமும் தொடர்பு கொள்ளக்கூடாது என்றும், மத்திய அரசு தனது வழிகாட்டுதல்களில் கூறியுள்ளது.