No need to fear monkey pox : குரங்கு அம்மை குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை: அமைச்சர் மன்சுக் மாண்டவியா

தில்லி : No need to fear monkey pox, Minister Mansukh Mandavia : குரங்கு அம்மை பாதிப்பு குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

இன்று கேரளத்தில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியானதை அடுத்து கேரளத்தில் 4 பேர் தில்லியில் ஒருவர் என ஐந்து பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக பரிசோதனைகளை தீவிரப்படுத்தும் வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநிலங்களையும், மத்திய அரசு அறிவுறுத்தியது. மேலும் இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. நிலை பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தின் (Parliament) மாநிலங்களவையில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, குரங்கு அம்மை குறித்து யாரும் கவலைப் படத்தேவையில்லை. இது குறித்து மாநில அரசுடன் இணைந்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்படுகிறது. ஏன் எனில் குறித்து விழிப்புணர்வு மக்களுக்கு அவசியம். அரசின் சார்பாக நிதி ஆயோக் உறுப்பினரின் தலைமையில் ஒரு சிறிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்தக்குழு அளிக்கும் ஆலோசனை பேரில், நாட்டில் குரங்கு அம்மை பாதிப்பு குறித்த‌ தற்போதைய நிலைமை, அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படும். கேரள அரசு கேட்டுக் கொண்டால் மத்திய அரசின் சிறப்பு குழு கேரளாவுக்கு அனுப்பி வைக்க தயாராக உள்ளோம். மத்திய அரசின் சிறப்புக் குழு கேரளாவிற்கு தொடர்ந்து வழிகாட்டுதல்களை வழங்கி (Providing continuous guidance to Kerala) வருகிறது. கேரளத்தில் முதல் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னரே மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கிவிட்டது. குரங்கு அம்மை பாதிப்பு யாருக்கேனும் உறுதி செய்யப்பட்டால் அவரது குடும்பத்தினர். தொடர்பில் இருந்தவர்கள், 12 அல்லது 13 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே தொற்று நோயின் பாதிப்பு குறைக்க முடியும் என்று பேசியுள்ளார்.

இந்த நிலையில் குரங்கு அம்மைக்கு தில்லியில் மூன்றவதாக ஒரு நபர் பாதிக்கப்பட்டுள்ளார். தில்லியில் இரண்டாவதாக ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், மூன்றாவதாக ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவரும் நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர் என தெரிவித்துள்ளது. இந்திய அளவில் குரங்கு அம்மை பாதிப்பு கேரளா, ராஜஸ்தான் மாநிலங்களில் மட்டுமே இருந்தது. தற்போது தில்லியில் 3 நபர்களுக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தேசிய அளவில் குரங்கு அம்மை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. தில்லியில் வசித்து வந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர் (A native of Nigeria) வெளிநாடுகளுக்கு போகாத நிலையில் குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் தில்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

தில்லியில் ஏற்கெனவே கடந்த 24-ஆம் தேதி ஒருவருக்கு முதன்முறையாக குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டது. இந்தநிலையில், கர்நாடகத்தில் குரங்கு அம்மையை பாதிப்பை தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் குரங்கு அம்மையால் யாரும் பாதிக்கப்படவில்லை என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் (Minister Ma. Subramanian) தெரிவித்துள்ளார். இருப்பினும் குரங்கு அம்மை பாதிப்பை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.