Tamil Nadu : தமிழகத்தில் இன்ஃப்ளுயன்சா தொற்றின் பாதிப்பு

சென்னை: Impact of influenza infection in Tamil Nadu ; தமிழகத்தில் இன்ஃப்ளுயன்சா தொற்றால் 965 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை மா.சுப்ரமண்யம் தெரிவித்தார்.

தமிழகத்தில் மருத்துவமனைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக (There is a shortage of medicines in hospitals) எழுந்த புகாரையடுத்து தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் மருந்துகள் கையிருப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை சென்னை எழும்பூரில் நடைபெற்றது. இதில் மா.சுப்ரமணியம் தலைமை ஏற்று பேசியது: தமிழகத்தில் மருந்துகள் தட்டுப்பாடு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஏற்கெனவே ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ளிட்டவையை ஆய்வு செய்து வருகிறோம். தேவையான மருந்துகள், காலாவதியான மருந்துகள் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் உக்ரைன் போரினாலும், பெட்ரோலியப் பொருள்கள் தட்டுப்பாடுகளால் மருந்து தட்டுப்பாடுகள் என்ற நிலை இருந்தது (Despite the war in Ukraine, shortages of petroleum products led to shortages of medicine). ஆனால் அது தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. 301 சிறப்பு மருந்துகள் மாவட்ட மருத்துவக் கல்லூரியின் தேவைக்கேற்ப கொள்முதல் செய்யப்படும். தமிழகத்தில் முதன் முறையாக சென்னை எழுப்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சிக்கு சிறப்பு நிலை ஆணை மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த மருத்துவமனையில் மரபணு நோய்கள் கண்டு பிடிக்கத்தல், சிறப்பு சிகிச்சை அளித்தல், சிறப்பு கலந்தாய்வு தருதல், மரபணு நோய்களின் பிறப்பை தடுப்பது, சிறப்பு பயிற்சி, ஆராய்ச்சிகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் விரிவு படுத்தப்படும்.

தமிழகம் முழுவதும் இன்ஃப்ளுயன்சா தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த 2 நாள்களுக்கு முன்பு 262 ஆக இருந்தது. அதில் 13 குழந்தைகள் அரசு மருத்துவமனைகளிலும், 41 குழந்தைகள் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மீதமுள்ள குழந்தைகள் வீட்டிலும் தனிமைப்படுத்தப்பட்டனர். கடந்த ஜனவரி முதல் இதுவரை இன்ஃப்ளுயன்சா தொற்றால் 965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் (965 people have been infected with influenza since last January). இதில் 10 இறப்புகள் பதிவாகி உள்ளன. குழந்தைகளுக்கு பாதிப்பு அறிகுறிகள் ஏதேனும் ஏற்பட்டால் மருத்துவர்களை அணுகி தனிமைப்படுத்திக் கொண்டு, மற்ற குழந்தைகளுடன் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அணுகாமல் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.