Fever camp : தமிழகத்தில் இன்று 1,000 இடங்களில் காய்ச்சல் முகாம்: அமைச்சர் மா.சுப்ரமணியன்

இது சாதாரண காய்ச்சல் பாதிப்புதான். காய்ச்சல் 3 அல்லது 4 நாள்களில் குணமாகிவிடும். பொதுமக்கள் அச்சமோ, பதற்றமோ அடைய தேவையில்லை.

சென்னை: Fever camp in 1,000 places in Tamil Nadu today: தமிழகம் முழுவதும் புதன்கிழமை (1,000 இடங்களில் காய்ச்சல் முகாம் நடைபெற உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது : தமிழகத்தில் ஆண்டுதோறும் பருவமழை தொடங்குவதற்கு முன்பு காய்ச்சல் பாதிப்பு பரவலாக இருக்கும். அந்த நிலைதான் தற்போது இருக்கிறது. வழக்கமாக மொத்த மக்கள் தொகையில் தினமும் 1 சதவீதம் பேர் காய்ச்சலால் பாதிக்கப்படுவதுண்டு . பருவநிலை மாற்றத்தின் போது அந்த எண்ணிக்கை 1.5 சதவீதமாக அதிகரிக்கும் (That number will increase to 1.5 percent during climate change). அந்த அளவுக்குதான் தற்போதைய நிலை உள்ளது.

தமிழகம் முழுவதும் ஹெச் 1 என் 1 இன்புளூயன்சா காய்ச்சலால் கடந்த ஜனவரி முதல் இன்று வரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 1,166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் (1,166 people from children to adults have been affected). இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது அரசு மருத்துவமனைகளில் 15 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 260 பேரும் , வீடுகளில் 96 பேரும் சிகிச்சையில் உள்ளனர். அனைவரும் நலமுடன் இருக்கின்றனர். இது சாதாரண காய்ச்சல் பாதிப்புதான். காய்ச்சல் 3 அல்லது 4 நாள்களில் குணமாகிவிடும். பொதுமக்கள் அச்சமோ, பதற்றமோ அடைய தேவையில்லை.

2257 வடகிழக்கு பருவமழை வரும் வரையிலும் , வந்த பின்ன ரும் காய்ச்சல் முகாம்களை நடத்துமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார் . அதன்படி, தமிழகம் முழுவதும் புதன்கிழமை 1,000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது (1,000 places conduct special fever medical camps). சென்னையில் மட்டும் 100 இடங்களில் முகாம் நடைபெறும் . காய்ச்சல், சளி, தலைவலி, இருமல் பாதிப்பு இருப்பவர்கள் முகாமில் வந்து சிகிச்சை பெறலாம் . ஒரே பகுதியில் மூன்று பேருக்கும் மேல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தால் அங்கு வியாழக்கிழமை முதல் சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தப்படும் .

இவைதவிர 388 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மருத்துவ சேவையாற்றி வருகிறது. கலைஞரின் வருமுன் காப்போம் திட்டமுகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. குழந்தைகளுக்கு காய்ச்சல் இருந்தால் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் (Do not send children to schools if they have fever). குழந்தைகளை கண்காணிக்கும்படி பள்ளிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்றார்.