Job Fair on 12th in Chennai: சென்னையில் வரும் 12ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னை: Private sector employment camp coming up on 12th in Chennai: சென்னையில் வரும் 12ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதாக வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களிலும், இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலை தேடுவோர், வேலை அளிக்கும் நிறுவங்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து 12.08.2022 (வெள்ளிக்கிழமை) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

இந்த வேலைவாய்ப்பு முகாம், ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தொழில் சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது.

இம்முகாமில் 8- ஆம் வகுப்பு, 10- ஆம் வகுப்பு, 12- ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ , டிப்ளமோ , கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் எதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 30-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் பதிவு இரத்து செய்யப்படமாட்டாது. வேலையாளிக்கும் நிறுவனங்களும், வேலை தேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

தர்மபுரியில் வரும் 12ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்:

தர்மபுரி: Private Sector Employment Camp coming up on 12th in Dharmapuri: தர்மபுரியில் வரும் 12ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் துறை நிறுவனங்களும் – தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் கலந்துக்கொள்ளும் “தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்” ஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் மற்றும் நான்காம் வெள்ளிக்கிழமைகளில் நடை பெறுகிறது.எனவே, தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவசப்பணியே ஆகும். இதன் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. அரசுத்துறைகளில் அவர்களது பதிவு மூப்பின்படி நேர்முகத் தேர்வு அனுப்பப்படும். எனவே, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவின நபர்கள் தனியார் துறையில் வேலைக்கு சென்றால் அவர்களது பதிவு இரத்து செய்யப்படமாட்டாது.

இம்முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு விற்பனையாளர், மார்க்கெடிங் எக்ஸ்க்யூட்டிவ், சூப்பர்வைசர், மேலாளர், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர், தட்டச்சர், அக்கவுண்டன்ட், கேசியர், மெக்கானிக், போன்ற பணிகளுக்கு தேர்வு செய்ய உள்ளனர். டிப்ளமோ பட்டப்படிப்பு மற்றும் மாளிப்படிப்பு முடித்த ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்துவித கல்வித்தகுதிக்கும் ஆட்கள் தேவை என தனியார்த்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஆகவே, மேற்படி பணிகளுக்கு தகுதியும், விருப்பம் உள்ள நபர்கள் அனைவரும் வருகின்ற 12.08.2022 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் நடைபெறவுdra தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது தவிர இதர கல்வித்தகுதிகள் உடையோரும் தகுந்த பணியிடங்களுக்கு பரிசிலிக்கப்படுவர்கள்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.