Job Fair for Tata Electronics: ஓருர் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

சேலம்: Job Fair for Tata Electronics in Salem. சேலம் மாவட்டத்தில், ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சேலம் மாவட்ட வேலை வாய்ப்பற்ற பெண்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில் நெறிவழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் – மகளிர் திட்டம் மற்றும் சேலம் ஸ்ரீ கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (19.10.2022) சேலம் அம்மாப்பேட்டை ஸ்ரீ கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இம்முகாமில் ஒருர் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கலந்து கொண்டு அந்நிறுவனத்திற்கு தேவையான 5000 – திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு பெண்களை தேர்வு செய்யவுள்ளனர். இம்முகாமில் கலந்து கொள்ளும் வேலை நாடும் பெண்கள் 12 – ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் இருத்தல் வேண்டும்.

இத்தலியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலை நாடுநர்கள் www.tnprivatejobs.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்து பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு [email protected] என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் மற்றும் 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

எனவே, வேலை தேடிக் கொண்டிருக்கும் தகுதியான பெண்கள் அதிக எண்ணிக்கையில் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.