Job Growth: ஏப்ரல் மாதத்தில் 38% உயர்வு கண்ட இந்திய வேலைவாய்ப்பு

ஏப்ரல் மாதத்தில் 38% உயர்வு கண்ட இந்திய வேலைவாய்ப்பு
ஏப்ரல் மாதத்தில் 38% உயர்வு கண்ட இந்திய வேலைவாய்ப்பு

Hiring: இந்தியாவில் உள்நாட்டு வேலைவாய்ப்பு நிலவரம் குறித்த புள்ளி விவரத்தை பிரபல வேலைவாய்ப்பு இணையதளமான நௌக்ரி வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் புதிய வேலை வாய்ப்பு எண்ணிக்கை 38 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, பெருந்தொற்று காலத்தில் பெரும் பாதிப்புக்குள்ளான சுற்றுலா மற்றும் ஹாஸ்பெடாலிட்டி துறைகள் புதிய வேலைவாய்ப்பில் சிறப்பான உயர்வை கண்டுள்ளது.

புள்ளி விவரத்தின் படி, கடந்தாண்டை ஒப்பிடும் போது 2022 ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் புதிய வேலைவாய்ப்பு எண்ணிக்கை 38 சதவீதம் உயர்வை கண்டுள்ளது. புதிய நிதியாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கும் நிலையில், இது சிறப்பான முன்னேற்றமாகும். குறிப்பாக, பெருந்தொற்று காரணமாக முடங்கிப்போன சுற்றுலா மற்றும் ஹாஸ்பெட்டாலிட்டி துறையில் புதிய வேலைவாய்ப்பு 169 சதவீதம் உயர்வைக் கண்டுள்ளது. இந்த துறையில் பூஜ்ஜியம் முதல் மூன்று ஆண்டு அனுபவம் கொண்ட இளைஞர்கள் அதிகளவில் வேலைக்கு சேர்ந்துள்ளனர்.

அடுத்ததாக ரீட்டெய்ல் துறையில் 112 சதவீத வேலைவாய்ப்பு வளர்ச்சியும், மிக வேகமாக வளர்ந்து வரும் கல்வித்துறையில் 108 சதவீத வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக ரியல் எஸ்டேட் துறையில் 89 சதவீதமும், காப்பீட்டு துறையில் 83 சதவீதமும் வேலைவாய்ப்பு வளர்ச்சி கண்டுள்ளது.

பெருநகர வாரியாக மும்பையில் 63 சதவீதம் வளர்ச்சி பதிவாகியுள்ளது. மெட்ரோ அல்லாத நகரங்களில் பட்டியலில் கோவை 63 சதவீத வளர்ச்சியுடன் நாட்டில் முதலிடம் பிடித்துள்ளது. அதேவேளை, இன்ஜினியரிங், பொறியியல், கட்டுமானம் மற்றும் ஸ்டீல் ஆகிய துறைகளில் வேலைவாய்ப்பு வீழ்ச்சி கண்டுள்ளது. மார்ச் மாதத்தில் வேலைவாய்ப்பு வளர்ச்சி 5 சதவீதமாக பதிவாகியிருந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் 38 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது இந்திய சந்தையில் சாதமாக சூழலை உருவாக்கியுள்ளது.

இது தொடர்பாக மான்ஸ்டர் வேலைவாப்பு நிறுவன சிஇஓ சேகர் கிராசியா கூறுகையில், “இரண்டு ஆண்டுகள் பெருந்தொற்றை நாம் கடந்து வந்த நிலையில், இந்திய பொருளாதாரம் தப்போது பின்னடைவுகளை தாண்டு வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்கிறது மகிழ்ச்சி தருகிறது. இது வரவேற்க்கதக்க ஒன்று” என்றார்.

இதையும் படிங்க: Honour killing: ஐதராபாத்தில் நடந்த ஆணவ கொலையை கண்டிக்கிறோம்- அசாதுதீன் ஓவைசி