Vice President Venkaiah Naidu : ஜூலை 9-ல் குடியரசு துணைத் தலைவர் பெங்களூரு வருகை : மௌண்ட் கார்மல் கல்லூரியின் பவள விழாவில் பங்கேற்பு

பெங்களூரு : Inaugurate the platinum jubilee celebration : குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, ஜூலை 9-ஆம் தேதி பெங்களூரு வருகை புரிந்து அன்று மௌண்ட் கார்மல் கல்லூரியில் உள்ள அரங்கத்தில் நடைபெற உள்ள‌ பவள விழாவில் பங்கேற்ற உள்ளார்.

விழாவில் மாநில ஆளுநர் தாவர் சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் ஆளுநர் மார்கரெட் ஆல்வா, முன்னாள் முதல்வர்கள் எஸ்.எம்.கிருஷ்ணா, வீரப்ப மொய்லி, எச் டி குமாரசாமி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் விழாவில் கலந்து கொள்கின்றனர்.

மௌண்ட் கார்மல் கல்லூரியின் பவள விழாவில் அந்த கல்லூரியில் 75 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் சிறப்பு அஞ்சல் அட்டையை குடியரசுத் துணைத் தலைவர் வெளியிடுகிறார். விழாவில் சகோதரி கிறிஸ் தலைமை உரையும், மௌண்ட் கார்மல் கல்லூரியின் தாளாளர் அர்பனா வரவேற்புரை ஆற்றுகின்றனர்.

மௌண்ட் கார்மல் கல்லூரி (MCC) என்பது பெங்களூரு நகர பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட இந்தியாவின் பெங்களூரில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சி கல்லூரி ஆகும். 1944- ஆம் ஆண்டு திருச்சூரில் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் கீழ் ‘கார்மல் கல்லூரி’ என நிறுவப்பட்ட முதல் மகளிர் கல்லூரிகளில் இதுவும் ஒன்றாகும். மேலும் 1948-ஆம் ஆண்டு பெங்களூருக்கு மாற்றப்பட்டது. இதன் இறுதி நோக்கம் கல்வியின் உதவியுடன் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதாகும்.

கல்லூரி கலை, அறிவியல் மற்றும் வணிகத்தில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் படிப்புகளை வழங்குகிறது. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சித் துறை (DSIR), இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி அமைப்பு (SIRO). கல்லூரியில் ஒரு சகோதர நிறுவனமான மவுண்ட் கார்மல் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் உள்ளது, இது பெண்களுக்கு வணிக மேலாண்மையில் முதுகலை டிப்ளமோ வழங்குகிறது.

இந்த கல்லூரியில்தான் முன்னாள் ஆளுநர் மார்கரேட் ஆல்வா, நடிகைகள் அனுஷ்கா சர்மா, அனுஷ்காஷெட்டி, நித்யா மேனன், ராதிகா பண்டிட் ஆகியோர் கல்வி பயின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌண்ட் கார்மல் கல்லூரியின் பவள விழாவில் பங்கேற்பதற்காக குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வருகை புரிவதையொட்டி பெங்களூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.