Holiday for schools, colleges : கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு ஜூலை 9-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு

கர்நாடகம் : Heavy Rain, holiday for schools and colleges : மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரையிலான பள்ளிகளுக்கு செவ்வாய் மற்றும் புதன்கிழமை மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்திருந்த‌து. தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு ஜூலை 9-ஆம் தேதி வரை விடுமுறை நீட்டித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிக்கமகளூரு மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், முடிகெரே தாலுகா பாலூர் ஹோபளி, கலச தாலுகா மற்றும் சிருங்கேரி ஆகிய கல்வி நிறுவனங்களுக்கு பொதுக் கல்வித்துறை இணை இயக்குந‌ர் அறிவுறுத்தலின்படி, விடுமுறை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தொடந்து மழை பெய்து வருவதால் ஜூலை 5 மற்றும் 6-ஆம் தேதிகளில் சிக்மகளூரு, உடுப்பி, தென் கன்னடம், வட‌ கன்னம் ஆகிய மாவாட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி ஜூலை 6 முதல் 9-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்க வேண்டியது அவசியம் என கல்வித்துறை பரிந்துரை செய்துள்ளது.

வட‌ கன்னம், தென் கன்னடம் மற்றும் உடுப்பி மாவட்டங்களில் புதன்கிழமை (ஜூலை 6) ஆரஞ்சு அலர்ட் அறிவிப்பு

மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் உத்தர கன்னடா, தென் கன்னடம் மற்றும் உடுப்பி மாவட்டங்களில் நாளை ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதால், தென் கன்னடம், உடுப்பி, வட‌ கன்னடம், குடகு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருவதால், வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தலின்படி, தென்கன்னடம், உடுப்பி மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி, பள்ளி, மேல்நிலைப் பள்ளி, இளங்கலை கல்லூரி மற்றும் முதுகலை பட்டக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள், ராஜேந்திரா, குருமாராவ் உத்தரவு பிறப்பித்துள்ளன‌ர். மேலும், இன்று வட‌ கன்னம், தென் கன்னடம் மற்றும் உடுப்பி மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள‌ அறிவுறுத்தப்பட்டுள்ளது.