Tenkasi Murder: அண்ணனை மணமுடிக்காமல் ஓட்டம்; தம்பியின் வெறிச்செயல்

தென்காசி: Two persons have been arrested in the woman murder case: திருமணத்தன்றே மணமுடிக்காமல் வேறொருவருடன் ஓட்டம் பிடித்த பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவத்தில் இருவரை கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்துவின் மகள் இசக்கிலட்சுமி (23). அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான வெங்கடேஷ் (24) என்பவருக்கும் கடந்த செப். 1ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. ஆனால் இசக்கிலட்சுமி அதற்கு முன்தினமே (ஆகஸ்ட் 31ம் தேதி) அதே பகுதியைச் சேர்ந்த ராம்குமாருடன் தலைமறைவானார்.

இதனையடுத்து மகள் காணாமல் போனது குறித்து இசக்கிமுத்து கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதனிடையே செப். 1ம் தேதி மணமகன் வெங்கடேஷ்க்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், மதுரையில் இசக்கிலட்சுமிக்கும் ராம்குமாருக்கும் திருமணம் செய்து சென்னையில் இரண்டு நாட்கள் தங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் ராம்குமாருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இசக்கிலட்சுமி தனது தந்தை வீட்டிற்கு திரும்பியதாகவும், உறவினர் வீட்டில் தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த 6ம் தேதி இசக்கிலட்சுமியை இருவர் டூவீலரில் வந்து தென்காசி மாவட்டம், கடையம் அருகேயுள்ள துப்பாக்குடியிலுள்ள காட்டுப்பகுதி ஓடைக்கு அழைத்துச்சென்று அவரது கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்த நிலையில் கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஆனந்த் (22) மற்றும் அவரது உறவினர் சிவா (19) ஆகிய இருவரை இந்த கொலை தொடர்பாக ஆழ்வார்குறிச்சி போலீசார் கைது விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது இசக்கிலெட்சுமிக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட வெங்கடேசின் சகோதரர் ஆனந்த் என்பதும், திருமணத்திற்கு முந்தைய நாள் இசக்கிலட்சமி வேறு வாலிபருடன் சென்றதால் குடும்பத்திற்கு அவமானம் ஏற்பட்டதாக நினைத்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அண்ணனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் மற்றொரு இளைருடன் திருமணம் செய்து கொண்டதால் மனவேதனை அடைந்து அந்த பெண்னை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.