Tirupur Accident: திருப்பூரில் அரசுப் பேருந்து- வேன் மோதல்: 3 பேர் உயிரிழப்பு

திருப்பூர்: Three of family killed as van hits government bus in Tamil Nadu’s Tirupur. திருப்பூரில் அரசுப் பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே அரசுப் பேருந்து மீது அவர்கள் சென்ற வேன் மோதியதில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வேனில் பயணம் செய்த மேலும் 3 பேர் தனியார் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் நிலையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இறந்தவர்களில் இன்னும் சில வாரங்களில் திருமணம் நடைபெறவிருந்த 26 வயது இளைஞரும் அடங்குவதாக காங்கயம் போலீஸார் தெரிவித்தனர். அவர் மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் மணமகளின் வீட்டிற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது இந்தச் சம்பவம் நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

மேலும் உயிரிழந்தவர்கள் திருப்பூர் பாண்டியன் நகரைச் சேர்ந்த மனோகரனின் மகன் எம்.யோகேஸ்வரன் (26), அவரது அத்தை பிரமிளா (45), தாய் தேவி (60) என போலீஸ் அதிகாரி ஒருவர் அடையாளம் காட்டினார்.

திருப்பூரில் கார்மென்ட் பிரிவில் பணிபுரியும் யோகேஸ்வரனுக்கு, திருமண தேதிகளை இறுதி செய்ய அவர்கள் மணமகள் வீட்டிற்குச் சென்றனர். பின்னர் வீடு திரும்பும்போது, வேனில் யோகேஸ்வரன், பிரமிளா, தேவி தவிர, உறவினர் மருதாச்சலம், 65, உட்பட மூன்று பேர் இருந்தனர். கரூர்-கோவை நெடுஞ்சாலையில் ஓலபாளையம் அருகே வேன் வந்தபோது, கோவையில் இருந்து கும்பகோணம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மீது மோதியது.

இந்த மோதலில் வேன் முற்றிலும் சேதமடைந்ததுடன், அதில் பயணித்தவர்கள் வேனுக்குள் சிக்கிக்கொண்டனர். சக வாகன ஓட்டிகள் விரைந்து வந்து அவர்களை காப்பாற்றி வேனில் இருந்து வெளியே எடுத்தனர். எனினும் யோகேஸ்வரனும் பிரமிளாவும் சம்பவ இடத்திலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள நான்கு பேர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் தேவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும், கடுமையான காயங்களுக்கு உள்ளான மீதமுள்ள மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்கான காரணம் குறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.