Smuggled gold seized : விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 6.50 கோடி மதிப்பில் தங்கம் பறிமுதல்

கோவை : Smuggled Rs. 6.50 crore gold jewelery seized : சார்ஜாவிலிருந்து கோவைக்கு வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.6.50 கோடி மதிப்பிலான தங்கத்தை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனர்.

சார்ஜாவில் கோவைக்கு வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து. அந்த விமானத்தில் வந்த 4 பேரை சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர் (Officers searched 4 people on suspicion). அப்போது, அவர்களின் உடைகள், கைப்பையில் தங்கத்தை மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து ரூ .6.50 கோடி மதிப்பிலான 12 கிலோ தங்க நகைகள் பறிமுதல் (12 kg gold worth Rs 6.50 crore seized) செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தங்கத்தைக் கடத்தி வந்த சென்னையைச் சேர்ந்த சுரேஷ்குமார் (37), கடலூரைச் சேர்ந்த சங்கர் (29), ராமநாதபுரம் பரமக்குடியைச் ராம்பிரபு (35), சேலத்தைச் சேர்ந்த குமரவேல் (44) ஆகியோரை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கைது செய்தனர். இது தொடர்பாக விசாரணையை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைக் காலமாக அரபு நாடுகளிலிருந்து விமானத்தில் வருபவர்களில் ஒரு சிலர் தங்கம் கடத்தி வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இவர்கள் சென்னை போன்ற பெரும் நகரங்களில் உள்ள விமான நிலையங்களை தவிர்த்து, திருச்சி, கோவை, தூத்துக்குடி (Trichy, Coimbatore, Thoothukudi) போன்ற விமானநிலையங்களுக்கு பயணித்து தங்கத்தை கடத்த முயற்சிக்கின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளும், இந்த விமான நிலையங்களில் சோதனை தீவிரப்படுத்தி உள்ளனர்.