Robbery of gold and diamonds: சென்னை நகைக்கடையில் துளையிட்டு தங்கம், வைரங்கள் கொள்ளை

சென்னை: Burglars drill hole in shutter, loot 9 kg of gold, diamonds from jewellery shop in Chennai. சென்னை நகைக்கடை ஒன்றில் ஷட்டரில் துளையிட்டு 9 கிலோ தங்க நகைகள் மற்றும் வைரங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகரின் பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் வசிப்பவர் ஸ்ரீதர். இவரின் இரண்டு மாடிகள் கொண்ட வீட்டில் 2வது மாடியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். முதல் மாடியில் ஜே.எல் என்ற பெயரில் கடந்த 8 வருடங்களாக நகைக் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்றிரவு வியாபாரம் முடிந்து நகைக் கடையைப் பூட்டிவிட்டு ஊயியர்கள் சாவியை ஸ்ரீதரிடம் கொடுத்துவிட்டுச் சென்றனர். இன்று காலை சுமார் 9 மணியளவில் ஸ்ரீதர் கடையைத் திறக்க வந்தபோது, கடையின் முன்பக்க ஷட்டர் வெல்டிங் மிஷினால் வெட்டியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது, கடையில் இருந்த லாக்கர் ரூம் கதவை அடையாளம் தெரியாத நபர்கள் வெல்டிங் மிஷினால் கட் செய்து உள்ளே இருந்த 9 கிலோ தங்க நகைகள், 20 லட்சம் மதிப்புள்ள வைரங்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ள தெரியவந்தது.

மேலும் கடையில் இருந்த சிசிடிவி கேமரா, ஹார்ட் டிஸ்கையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. உடனே ஸ்ரீதர் திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டுள்ளது. கூடுதல் ஆணையர் மற்றும் இணை ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் குற்றவாளிகளைப் பிடிக்க 3 உதவி ஆணையர்கள் தலைமையில் 9 காவல் ஆய்வாளர்கள் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.