Old woman was hacked to death with a scythe: ஈரோடு அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி அரிவாளால் வெட்டிக்கொலை

ஈரோடு: An elderly woman who was alone at home near Erode was hacked to death with a sickle. ஈரோடு அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொம்மநாயக்கன்பாளையம் கே.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் மூதாட்டி சரஸ்வதி (வயது 88). இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில், இன்று அதிகாலை மூதாட்டி வீட்டை விட்டு வெளியே வந்தபோது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர் ஒருவர் சரஸ்வதியை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த சரஸ்வதியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் கோபியில் அருகே வசிக்கும் அவரது மகள் ராதாவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக அங்கு வந்த அவரது மகள் ராதா அக்கம்பக்கத்தினர் உதவிடன் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோபியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சரஸ்வதி உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த கோபி போலீசார் சரஸ்வதியின் சடலத்தை கைப்பற்றி கோபி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சரஸ்வதி சொத்துக்காக கொலை செய்யப்படாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயி தற்கொலை முயற்சி
விழுப்புரம் மாவட்டம், வளவனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னக்கள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 70), விவசாயி. இவர் தனது நிலத்தின் கூட்டுப்பட்டாவினை தனிப்பட்டாவாக மாற்றக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 17 முறை கோரிக்கை மனு கொடுத்துள்ளார். இருப்பினும் இதுநாள் வரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் விரக்தியடைந்த ராம கிருஷ்ணன், நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பினாயில் பாட்டிலுடன் வந்தார். அவர் ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் முன்பு அந்த பினாயில் பாட்டிலை திறந்து குடிக்க முயன்றபோது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று அவரை தடுத்து நிறுத்தி பினாயில் பாட்டிலை பிடுங்கினர்.

அவரை ஆட்சியரிடம் அழைத்துச்சென்றனர். அப்போது அவர், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார். மனுவை பெற்ற ஆட்சியர் மோகன், இதன் மீது பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

கோரிக்கை மனு கொடுக்க வந்த விவசாயி ஆட்சியர் அலுவலகத்தில் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.