Bullets seized in east Delhi : 2 ஆயிரம் தோட்டாக்கள் பறிமுதல் : 6 பேர் கைது

2 thousand bullets seized in east delhi

தில்லி: 2 thousand bullets seized in east delhi : சுதந்திர தினத்தையொட்டி பாதுகாப்பு பணியில் இருந்த தில்லி போலீசார், 2 ஆயிரம் துப்பாக்கித் தோட்டாக்களை பறிமுதல் செய்து, இது தொடர்பாக 6 பேரை கைது செய்தினர்.

நாட்டின் 75 வது சுதந்திர தினத்தையொட்டி தில்லியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆக. 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைக்க உள்ளார். சுதந்திரத் தினக் கொண்டாட்டத்தை சீர்குலைக்க லஷ்கர், ஜெய்ஷ்இ முகம்மது தீவிரவாதிகள், சதி செய்துள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை (Central Intelligence Agency alert) விடுத்துள்ளது. இது தொடர்பாக 10 பக்க அறிக்கையை தில்லி போலீசாருக்கு வழங்கி உள்ள உளவுத்துறை, பாதுகாப்பு ஏற்பாடுகளை கூடுதல் கவனத்துடன் செய்யும்படி தில்லி போலீசாருக்கு அறிவுரை வழங்கி உள்ளது.

இதனையடுத்து, தில்லியில் ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் (Railway Stations, Airports), பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கிழக்கு தில்லி ஆனந்த் விஹார் அருகே போலீசார் சோதனை ஈடுபட்டிருந்தப்போது, பேருந்து நிலையம் அருகே 2 நபர்கள் கனமான பையுடன் சென்றதையடுத்து, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, பைகளை சோதனை செய்தனர். அதில் 2,251 க்கும் மேற்பட்ட துப்பாக்கித் தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் மேலும் 4 பேரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரில் வசிக்கும் 20 வயது 20 அஜ்மல்கான், 20 வயது ரஷீத் என்ற லலன், சதாம், உத்தரகண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த பரீக்ஷித் நேகி, தில்லியைச் சேர்ந்த கம்ரன் மற்றும் ரூர்க்கியில் வசிக்கும் நசீர் ஆகிய 6 பேர் ஆவர். இந்த 6 பேரும் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரும் ஒருவர்.

இது குறித்து காவல்துறை கூடுதல் ஆணையர் (கிழக்கு எல்லை) விக்ரம்ஜித் சிங் (Vikramjit Singh) கூறியது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒரு குற்றவியல் வலையமைப்பின் ஒரு பகுதியாக இருப்பதாகத் தெரிகிறது, என்றாலும் அவர்களிடம் பயங்கரவாத கோணத்திலும் விசாரிக்கப்படுகிறது என்றார். இது தொடர்பாக எங்களுக்கு ஆட்டோ ஓட்டுநர் ஒருவரிடமிருந்து தகவல் கிடைத்தது. போலீசார்அவர்களை இடைமறித்து, அவர்களின் பையைச் சரிபார்த்து, பல்வேறு வகையான இறக்குமதி செய்யப்பட்ட வெடிமருந்துகள் அடங்கிய நேரடி தோட்டாக்களை மீட்டனர் என்றார் சிங்.


அவர்கள் மீது ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்கள் டேராடூனில் உள்ள ஒருவரிடமிருந்து வெடிமருந்துகளைப் பெற்றதாகவும், அது லக்னோவில் வழங்கப்பட உள்ளதாகவும், காவல்துறை துணை ஆணையர் (கிழக்கு) பிரியங்கா காஷ்யப் தெரிவித்தார்.

Also Read : Karnataka CM change : முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை சந்தித்த முதல்வர் பசவராஜ் பொம்மை

Also Read : Free GATE preparation portal: கேட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த இலவச இணையதள சேவை

2 thousand bullets seized in east delhi