Mangalore Fazil Murder : கொலை செய்யப்பட்ட காட்சி சிசி கேமராவில் பதிவாகியுள்ளது

பிரிவு 144 அமலாக்கம் மங்களூர்: இரவு 8.30 மணியளவில், தனது நண்பருடன் கடை முன் நின்று கொண்டிருந்த ஃபாசிலை, திடீரென 3 வாலிபர்கள் கும்பல் ஆயுதங்களுடன் தாக்கிவிட்டு தப்பிச் சென்றது.

மங்களூர்: சூரத்கல் மாவட்டம் மங்கல்பேட்டையில் ஃபாசில் என்ற வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ளார். ஃபாசில் (Mangalore Fazil Murder) ஆயுதங்களால் வெட்டிக் கொல்லப்பட்டு, துணிக்கடை முன்பு நடந்த கொலைக் காட்சி தற்போது சிசி கேமராவில் பதிவாகியுள்ளது.

தென் கன்னடம் மாவட்டத்தின் பெல்லாரேவில் பிரவீன் நெட்டாரு கொல்லப்பட்டதை அடுத்து, மங்களூரு புறநகரில் உள்ள சூரத்கலில் ஃபாசில் கொல்லப்பட்டார். இரவு 8.30 (At 8.30 pm )மணியளவில் தனது நண்பருடன் கடையின் முன் நின்று கொண்டிருந்த ஃபாசிலை அங்கு திடீரென 3 இளைஞ‌ர்கள் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதனைத் தொடர்ந்து ஃபாசில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், பலனின்றி அவர் உயிரிழந்தார்.

ஃபாசில் கொல்லப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக (viral on social media) பரவி வருகிறது. ஃபாசில் கொலைக்கான சரியான காரணம் தெரியவில்லை. காதலுக்காக இந்த செயல் நடந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்து எந்த உறுதியும் இல்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து சூரத்கல் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மங்களூரு நகர காவல் ஆணையர் எல்லைக்கு உட்பட்ட நான்கு காவல் நிலையங்களிலும் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சூரத்கல், பஜ்பே, பனம்பூர், முல்கி காவல் நிலையங்களில் தடை உத்தரவு.

இச்சம்பவம் இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிப்போம். பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும். அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், பனம்பூர், முல்கி, சூரத்கல், பஜ்பே (Banambur, Mulki, Suratkal, Bajpe) உள்ளிட்ட 4 காவல் நிலையங்களில் மதுக்கடைகள் திறக்கப்படாது எனவும் மங்களூரு நகர காவல் ஆணையர் என்.சசிகுமார் தெரிவித்துள்ளார்.