laborer killed in Chennai: சென்னையில் மாடியிலிருந்து தள்ளிவிட்டு கூலி்தொழிலாளி கொலை

சென்னை: A laborer was killed after being pushed from the floor in Chennai. வேளச்சேரியில் கூலித் தொழிலாளி மாடியிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாநகரின் வேளச்சேரி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் 3வது மாடியிலிருந்து ஆனந்தன்(22), என்பவர் தவறி கீழே விழுந்ததாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அங்கு அவர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையிலிருந்து வேளச்சேரி போலீசாருக்கு தகவல் வந்தது.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட போலீசார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தவர்களின், நண்பர்களிடம் கேட்ட போது குடிபோதையில் கீழே விழுந்து உயிரிழந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் அவர்கள் கூறியதில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தபோது, அதில் மூவரும் பதட்டமில்லாமல் பொறுமையாக கீழே வந்து உயிரிழந்தவரின் வாயில் மதுவை ஊற்றியது பதிவாகியிருந்தது.

இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி ஆதாரத்தின் அடிப்படையில், அங்கு ஒன்றாக மது அருந்திய கட்டிட தொழிலாளிகளான திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல்(25), சீனிவாசன்(25), பிரசாந்த்(23), ஆகியோரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இதில் சீனிவாசன் தவிர்த்து மற்ற மூவரும் ஒன்றாக வேலை பார்த்து வந்த்தாகவும், இதில் ஆனந்தன் மட்டும் நன்றாக வேலை செய்வதால் அவருக்கு மேஸ்திரி 50 ரூபாய் கூடுதலாக கூலி கொடுத்துள்ளார். இதனால் மற்றவர்கள் ஆனந்தனிடம் நீயும் வேலையை பொறுமையாக செய்யுமாறு கூறியுள்ளனர். நீ செய்யும் வேலையால் மேஸ்திரி எங்களை அவமானபடுத்துகிறார் என முறையிட்டதாகவும், அதனை ஆனந்தன் கண்டுகொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மூவரும் சேர்ந்து சீனிவாசன் வேலை செய்யும் வேளச்சேரி கட்டிடத்தில் மது அருந்த ஆனந்தனை அழைத்து வந்துள்ளனர் பின்னர் மது அருந்திவிட்டு மாடியில் இருந்து ஆனந்தனை தள்ளிவிட்டு கொலை செய்தது வாக்குமூலம் அளித்தனர்.

இதனையடுத்து மூவரையும் கைது செய்த வேளச்சேரி போலீசார், வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.