Husband set his wife on fire : வரதட்சணை கொடுக்க மறுப்பு: மனைவிக்கு தீ வைத்த கணவன்

Dowry : தாலி சேர் கொடுக்க ராஜேஸ்வரி மறுப்பு. இதனால் ஆத்திரமடைந்த ஹரிஷ் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து விடுவதாக மிரட்டினார்.

மைசூரு: Husband set his wife on fire : கடந்த காலங்களில் வரதட்சணை கொடுமை அதிகமாக இருந்தது. தற்போது பெரும்பாலானவர்கள் கல்வி கற்றதால் இந்த கொடுமைக்கு முடிவு ஏற்பட்டது. ஆனால் ஒரு சில இடங்களில் இன்றும்வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. மைசூரில் வரதட்சணை கேட்டு மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கணவர் கொன்றுள்ளார். தீப்பிடித்த நிலையில், தப்பிக்க கணவனை மனைவி கட்டிப்பிடித்த சம்பவம் நடந்துள்ளது.

மைசூரு மாவட்டம் கே.ஆர்.நகர் (Mysore District KR Nagar) வட்டம் ஹரதனஹள்ளி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இருபத்தி எட்டு வயதான ராஜேஸ்வரி இறந்த பெண், அவரது கணவர் ஹரிஷ் காயங்களுடன் கே.ஆர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நேற்று இரவு அப்பகுதியில் நடந்த இசைக் கச்சேரியை பார்த்துவிட்டு மது அறுந்தி விட்டு வந்த கணவர் ஹரிஷ், மனைவி ராஜேஸ்வரியிடம் (Husband Harish, wife Rajeshwari) தாலிக் கொடியை தருமாறு கேட்டுள்ளார். ராஜேஸ்வரி தாலி கொடியை கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹரிஷ் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து விடுவதாக மிரட்டினார். இந்நிலையில், அக்கம் பக்கத்தினரை அழைக்குமாறு ராஜேஸ்வரி தனது மகனிடம் கூறியுள்ளார். இதற்கிடையில் ஹரிஷ் ராஜேஸ்வரி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். தீயில் இருந்து தப்பிக்க மனைவி ராஜேஸ்வரி தனது கணவரை கட்டிப்பிடித்தார். அக்கம் பக்கத்தினர் வந்து தீயை அணைப்பதற்குள் இருவரும் தீயில் கருகினர். இதையடுத்து, 2 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பலத்த தீக்காயம் அடைந்த ராஜேஸ்வரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஹரிஷ் – ராஜேஸ்வரி தம்பதிக்கு கடந்த ஆறரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணமான நாளில் இருந்து ஹரிஷ் தனது மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தார். திருமணத்தின் போது ராஜேஸ்வரியின் குடும்பத்தினர் ஹரிஷுக்கு 100 கிராம் தங்கம், இரண்டு லட்சம் ரொக்கப்பணம், பல்சர் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். அதன் பிறகு சில காலம் மனைவியை நன்றாக கவனித்துக் கொண்டார். ஆனால் அதன் பிறகு வரதட்சணை தரும்படி பலமுறை வற்புறுத்தி வந்தாராம். அவருக்கு ஆதரவாக ஹரிஷின் தாயார் இருந்தாராம். எனவே, இது குறித்து ராஜேஸ்வரி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் (Complained at the police station). இதற்குப் பிறகு போலீசார் அவர்களுக்கு பஞ்சாயத்து பேசி சமரசம் செய்து வைத்துள்ளனர். பஞ்சாயத்தில் இனி வரதட்சணை கேட்க மாட்டேன் என்று உறுதி அளித்த ஹரிஷ், மீண்டும் சில நாட்களுக்கு பிறகு தனது பழைய போக்கைத் தொடர்ந்துள்ளார்.

தற்போது, ​​இறந்த ராஜேஸ்வரியின் தந்தை சோமசேகர், இந்த பிரச்னைகள் அனைத்தையும், புகார் மனுவில் விரிவாக எழுதி, சாலிகிராமம் காவல் நிலையத்தில் அளித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை (Appropriate legal action) எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். வரதட்சணைக்காக மனைவியை தீ வைத்து கொளுத்தி கொலை செய்த‌ ஹரீஷை, அப்பகுதி மக்கள் கோபத்தில் திட்டி, சபித்து வருகின்றனர்.