DMK leader Murder: திருத்தணியில் தி.மு.க பிரமுகர் வெட்டிக்கொலை: மர்ம கும்பலுக்கு வலைவீச்சு

திருத்தணி: DMK leader hacked to death in Tiruthani: திருத்தணியில் திமுக பிரமுகரை வெட்டிக்கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஜெஜெ நகரில் வசிப்பவர் மோகன். திமுக உறுப்பினரான இவர், நேற்று இரவு 10 மணியளவில் தனது வீட்டுக்கு ஜெஜெ நகர் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது மர்ம நபர்கள் 3 பேர் மோகனை சரமாரியாக முகம் மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து மோகன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில், அவ்வழியாக வந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
Also Read: Dipika Pallikal : வெண்கலப் பதக்கம் வென்ற தீபிகா பல்லிகல், தினேஷ் கார்த்திக்கின் மனைவி மற்றும் இரட்டைக் குழந்தைகளின் தாயாவார்

தகவலின் பேரில் உடனடியாக அங்கு விரைந்த போலீசார் மோகனை வெட்டு காயங்களுடன் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மோகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து திருத்தணி சட்டம் ஒழுங்கு போலீசார் வழக்கு பதிவு செய்து மோகனை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கொலையாளிகளை திருத்தணி அரக்கோணம் சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் தேடி வருகின்றனர்.

கட்டிடத் தொழிலாளி அரிவாளால் வெட்டிக்கொலை: இருவர் கைது
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் அருகே கட்டித்தொழிலாளி வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் அடுத்த முட்டம் கிராமத்தை சேர்ந்தவர் நரசிங்கமூர்த்தி. கட்டிடத் தொழிலாளியான இவர் குடித்துவிட்டு மனைவி மகன்களுடன் தகராறு செய்து வந்துள்ளார்‌. மேலும் அவரது வீட்டிற்கு அருகாமையில் உள்ள உறவினரான பரமசிவம் என்பவரிடமும் இவர் மது போதையில் சில சமயங்களில் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு வீட்டிற்கு வந்த நரசிம்ம மூர்த்திக்கும் உறவினரான பரமசிவத்துக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
Also Read: Ethanol Plant in Panipat: எத்தனால் தொழிற்சாலை நாளை நாட்டுக்கு அர்ப்பணிப்பு

இந்நிலையில் பரமசிவம் வீட்டில் இருந்த மிதிவண்டியை நரசிம்மமூர்த்தி எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பரமசிவன் மற்றும் மனைவி பாக்கியவதி, மகன் மகாதேவன் ஆகியோர் சேர்ந்து அரிவாளால் அவரை வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே நரசிம்மமூர்த்தி உயிரிழந்தார்.

இது குறித்து நாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக பரமசிவம்(57) மற்றும் அவரது மகன் ஆகிய இருவரை கைது செய்த நாகூர் நகர போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.