College student Suicide: தாய் இறந்த சோகத்தில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

திருவள்ளூர்: College student hangs himself in grief over mother’s death. தாய் இறந்த சோகத்தில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதுபெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் மோகன் (18). இவர் தனியார் கல்லூரியில் படித்துவந்தார். இவரது தாய் ராதிகா கடந்த 8 மாதங்களாக உடல்நலம் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில். சிகிச்சை பலனின்றி ராதிகா உயிரிழந்தார் . இதையடுத்து தாயை நினைத்து மோகன் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த மோகன் படுக்கை அறையில் உள்ள ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீடு திரும்பிய தந்தை சுரேஷ், மகன் தூக்கில் பிணமாக கிடப்பது பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மப்பேடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அன்பு விரைந்து வந்து போலீசார் மாணவனை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தாய் இறந்த சோகத்தில் துட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய் இறந்த துக்கம் தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மகன் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்பட்டுள்ளது.

கலெக்டர் அலுவலகம் முன் உண்ணாவிரதம்; 24 பேர் கைது
திருப்பூர்: பல்லடம் தாலுாகா கோடங்கிப்பாளையத்தில் முறைகேடாக அனுமதி பெற்று இயங்கி வரும் கல் குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, அப்பகுதியை சேர்ந்த விவசாயி செந்தில்குமார், 10-வது நாளாக நேற்று காலவரையற்ற உண்ணாவிரதத்தை அவருடைய சொந்த நிலத்தில் இருந்து வருகிறார்.

பல்லடம் தாசில்தார் தலைமையில் ஆய்வு செய்த பின்பும் இதுவரை இரண்டு குவாரிகளின் உரிமம் ரத்து செய்யப்படாமல் உள்ளது. செந்தில்குமாரின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் என 10 பெண்கள், நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்கள்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வக்கீல் ஈசன் முருகசாமி உள்ளிட்ட அமைப்பை சேர்ந்தவர்களும் உண்ணாவிரதம் இருந்தனர். இதைத்தொடர்ந்து அங்கிருந்த தெற்கு போலீசார், உண்ணாவிரதம் இருந்த 10 பெண்கள் உள்பட 24 பேரை கைது செய்து, அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

மண்டபத்தில் 24 பேரும், மதியம் 12 மணி முதல், உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். போலீசார் பேசியும் அவர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். திருப்பூர் ஆர்.டி.ஓ. பண்டரிநாதன், தெற்கு தாசில்தார் கோவிந்தராஜ், பல்லடம் தாசில்தார் நந்தகோபால், திருப்பூர் தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் பிச்சையா ஆகியோர் உண்ணாவிரதம் இருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், அவர்கள் உண்ணாவிரதம் நீடித்தது.