Mobile Game : மொபைல் போன் காரணமாக தந்தை மற்றும் மகன் இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை

எப்போதும் மொபைலில் மூழ்கியிருந்த மகனுக்கு, தந்தை அறிவுரை வழங்கினார்.

சென்னை: ( Mobile Game) எப்போதும் மொபைலில் மூழ்கியிருந்த மகனுக்கு தந்தை அறிவுரை வழங்கினார். இதனால் கோப‌மடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால், தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னை குன்றத்தூரில் நடந்துள்ளது.

இறந்தவர் குன்றத்தூர் திருவள்ளுவர் பகுதியைச் சேர்ந்த சுந்தர் (40 வயது) என்பது தெரியவந்தது. 10 ஆம் வகுப்பு படித்து வரும் சுந்தரின் இளைய மகன் நவீன் எப்போதும் மொபைல் போனில் மூழ்கி இருப்பான். அவன் படிக்காமல் மொபைல் கேம் விளையாடுவதைக் கவனித்த அவனுடைய அப்பா மொபைலை ஒதுக்கி வைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்த அறிவுரை கூறியுள்ளார். ஆனால் தந்தை திட்டியதால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நவீன் சேலையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். சுந்தர் வெளியே சென்று வீடு திரும்பியபோது, ​​மகன் இறந்த செய்தியை அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். மகன் மின்விசிறியில் சேலை கட்டி தூக்கில் தொங்கியதை கண்டு மனம் வருந்திய அவர், சமையல் அறைக்கு சென்று கத்தியால் கை, கழுத்தை அறுத்துக்கொண்டு அறைக்கு சென்று கதவை பூட்டிவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை (Suicide by hanging) செய்து கொண்டார்.

கடந்த சில‌ ஆண்டுகளில், குழந்தைகள் பெரும்பாலும் மொபைல் போன்களுக்கு அடிமைகளாக மாறிவிட்டனர் (They have become addicted to mobile phones). அவர்கள் எப்போதும் தங்கள் பொன்னான நேரத்தை மொபைலில் செலவிடுகிறார்கள். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை மொபைல் போன் பயன்படுத்துவதை தடுக்க முயற்சி செய்து வருகின்றனர். தனது மகனுக்கு மொபைல் போன் பயன்படுத்த வேண்டாம் என்று சொன்னதில் தவறில்லை. மகனின் மீதுள்ள அக்கறையால், மொபைல் போனில் இருந்து விலகி இருக்குமாறு தந்தை திட்டியதால், மகன் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது வேதனையாகும்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு(Crompet Govt Hospital) அனுப்பி வைத்தனர். மேலும், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.