4 women killed in crowd: வாணியம்பாடியில் கூட்ட நெரிசல் சிக்கி 4 பெண்கள் உயிரிழப்பு

வாணியம்பாடி: The death of 4 women in Vaniyampadi has caused a tragedy. வாணியம்பாடியில் இலவச வேட்டி, சேலைக்கு டோக்கன் வாங்கும்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடியில் தனியார் தொண்டு நிறுவனத்தினர் தைப்பூசத்தை முன்னிட்டு 2 ஆயிரம் பேருக்கு நாளை இலவச வேஷ்டி, சேலை வழங்குவதாக அறிவித்திருந்தனர். நிறுவனத்தின் சார்பில் கடந்த சில ஆண்டுகளாக தைப்பூசத்தன்று இலவச புடவைகள் வழங்கி வருகின்றார். இதற்கான டோக்கன்கள் வாணியம்பாடி சந்தை அருகே இன்று வழங்கப்பட்டன.

அப்போது 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் அங்கு குவிந்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து பெண்கள் பிடித்துத் தள்ளியதில் ஏராளமானோர் கீழே விழுந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 16 பேர் பெண்கள் மயக்கம் அடைந்தனர். இதில் கூட்டத்தில் சிக்கிய 4 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். வாணியம்பாடி போலீசார், தீயணைப்பு துறையினர் அங்கு வந்து கூட்டத்தை கலைத்தனர்.

மயக்கம் அடைந்த பெண்களை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 12 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமார், நகர திமுக செயலாளர் சாரதிக்குமார் ஆகியோர் நேரில் சென்று சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

இது குறித்து வாணியம்பாடி போலீசார் விசாரித்து வருகினறனர்.