4 people arrested get 7th married Fraud: அடிக்கடி திருமணம்.. ஆங்காங்கே பலே மோசடி; சிக்கிய 4 பேர் கும்பல்

நாமக்கல்: Police have arrested 4 people including a woman who tried to get married for the 7th time near Namakkal. நாமக்கல் அருகே 7வது திருமணத்திற்கு முயன்ற பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அடுத்த கள்ளிபாளையத்தை சேர்ந்தவர் தனபால் (35), மதுரையைச் சேர்ந்த சந்தியா (26) என்பவருக்கும் கடந்த 7ம் தேதி புது வெங்கரை அம்மன் கோவிலில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த திருமணத்திற்கு பெண்ணுடைய அக்கா, மாமா மற்றும் மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் (45) என்ற கல்யாண புரோக்கர் ஆகிய 3 பேர் மட்டுமே வந்துள்ளனர். திருமணத்திற்குப்பின் கமிஷனாக ரூ. 1.5 லட்சம் வாங்கிக் கொண்டு மூவரும் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. திருணமான புது தம்பதிகள் தங்களது வாழ்க்கை பயணத்தை தொடங்கினர்.

இதனையடுத்து 2 நாட்கள் சென்றபின், கடந்த 9ம் தேதி அதிகாலை புது மணப்பெண் சந்தியாவை திடீரென்று காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தனபால் தனது மனைவியை தேடி அலைந்துள்ளார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதனைத்தொடர்ந்து சந்தியாவின் செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட் ஆப் என வந்துள்ளது. மேலும் கல்யாண புரோக்கர் பாலமுருகன் மற்றும் அவரது உறவினர்களின் செல்போன் நம்பர்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

பின்னர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த பீரோவில் கல்யாண பட்டு புடவை, நகை, மணப்பெண் கொண்டு வந்த துணிமணிகள் அனைத்தும் எடுத்துச் சென்றது தெரியவந்தது. திருமணம் செய்வதாகக் கூறி அவர்கள் மோசடியில் ஈடுபட்டதை தெரிந்துகொண்ட தனபால் இது குறித்து போலீசில் புகாரளித்துள்ளார்.

இந்தநிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபருக்கு திருமணம் செய்து கொடுக்க மணமகளை தேடிய போது வேறு ஒரு புரோக்கர் மூலம் சந்தியாவின் போட்டோ வந்துள்ளது. உடனடியாக உஷாரான தனபால் குடும்பத்தினர், திருமணம் செய்து கொள்ள விரும்புவது போல் மதுரையைச் சேர்ந்த தனலட்சுமி (45) என்ற புரோக்கரிடம் பேசி உள்ளனர்.

மணமகனின் போட்டோ புரோக்கரிடம் கொடுத்துள்ளனர் அதற்கு மணமகளுக்கு மாப்பிள்ளையை பிடித்து உள்ளது என பேசி போன் மூலமே முடிவு செய்துள்ளனர். நேற்று காலை திருச்செங்கோட்டில் திருமணம் செய்வதாக முடிவு செய்து அதிகாலை 6 மணிக்கு சந்தியா, புரோக்கர் தனலட்சுமி உறவினர் ஐயப்பன் ஆகியோர் ஒரு காரில் திருச்செங்கோடு வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த சந்தியா வசமாக சிக்கிக்கொண்டார். தொடர்ந்து மூவரையும் வளைத்துப்பிடித்த தனபால் உறவினர்கள் அவர்களை பரமத்தி வேலூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் மதுரையை சேர்ந்த இந்த மோசடி கும்பல், இதுவரை சந்தியாவுக்கு 6 முறை திருமணம் நடத்தி வைத்து பணம் மற்றும் நகைகளை மோசடி செய்ததுள்ளதும், தற்போது 7 ஆவதாக நடக்க இருந்த திருமணத்தின் போது சிக்கிக் கொண்டதும் தெரியவந்தது.

ஒவ்வொரு திருமணத்தின் போதும் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு இரண்டு நாள் மாப்பிள்ளையிடம் நெருங்கிப் பழகிவிட்டு, பணம் மற்றும் நகையுடன் எஸ்கேப் ஆகிவிடுவது வழக்கம். திருமணமாகாத ஆண்களை குறி வைத்து, மதுரையைச் சேர்ந்த கல்யாண புரோக்கர்கள் மூலம் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.