Release of 6 people, including Nalini : நளினி உள்பட 6 பேரை விடுதலை செய்யக் கோரிய வழக்கு விசாரணை நவ. 11 ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு

டெல்லி: The case hearing for the release of 6 people, including Nalini, was held on Nov. 11th Adjournment : நளினி உள்பட 6 பேரை விடுதலை செய்யக் கோரிய வழக்கை நவ.11 ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நளினி உள்ளிட்ட 6 பேர் சிறையில் உள்ளனர். உச்ச நீதிமன்றம் கடந்த மே 18 ஆம் தேதி சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை (Pererivalan release using special powers) செய்தது. பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து மற்ற 6 பேரும் விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு நவ.11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தமிழக அமைச்சரவை தீா்மானத்தின் மீது ஆளுநா் முடிவெடுப்பதில் தாமதம் செய்ததாகக் கூறி அரசியலமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவின் கீழ் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் உத்தரவிட்டது (The Supreme Court ordered Perariwalan’s release last May). இதனிடையே, சிறைத் தண்டனை அனுபவித்து வரும் மற்ற ஆறு பேரில் ரவிச்சந்திரன், நளினி ஆகிய இருவரும் தங்களையும் இதே காரணத்திற்காக சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கூறி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த விவகாரத்தை விசாரித்த உயா்நீதிமன்றம், இது போன்று ஏற்கெனவே ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருப்பதாலும், பேரறிவாளனை உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுவித்தது போன்ற அதிகாரம் உயா்நீதிமன்றத்திற்கு இல்லை என்றும் கூறி அந்த மனுக்களை தள்ளுபடி செய்து கடந்த ஜூன் 17-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடா்ந்து, ரவிச்சந்திரன், எஸ்.நளினி ஆகியோா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளித்துள்ள நிலையில், மத்திய அரசுக்கும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இதனிடையே, நளினி உள்பட 6 பேரை விடுதலை செய்யக் கோரிய வழக்கு விசாரணையை நவ. 11 தேதிக்கு உச்சநீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது (The case hearing for the release of 6 people, including Nalini, was held on Nov. 11th Adjournment ).