Supreme Court : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தவர்களை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: Supreme Court ordered the release of those serving life imprisonment in the Rajiv Gandhi assassination case : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, முருகன், ரவிச்சந்திரன், சாந்தன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி இரவு தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பேரணியில் தனு என்ற பெண் உள்ளிட்ட தற்கொலைப் படையால் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் எஞ்சிய குற்றவாளிகளை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது (Supreme Court ordered on Friday). மே மாதம் விடுதலையான ஏஜி பேரறிவாளன் வழக்கை பரிசீலித்த நீதிபதிகள், நளினி, முருகன், ரவிச்சந்திரன், சாந்தன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரை விடுவிக்க நீதிபதிகள் பி ஆர் கவாய் மற்றும் பி வி நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் பங்கேற்றப்போது தற்கொலைப் படை தாக்குதலில் கொல்லப்பட்டார். இதில் ராகுல்காந்தி கொல்லப்பட்டார் (Rahul Gandhi was killed). அவருடன் 16 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு 24 ஆண்டுகளுக்குப் பிறகும், உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகும் மே மாதம் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார்.

தீர்ப்பு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ், நாம் தமிழர் கட்சி (Naam Tamilar party) சீமான் ஆகியோர் வரவேற்றுள்ளனர். ராஜிவ் கொலை வழக்கில் தண்டனைக் காலத்தை நிறைவு செய்த பிறகும் சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி, முருகன், ரவிச்சந்திரன், சாந்தன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி வழக்கில், மீதமுள்ள ஆறு தமிழர்களையும் விடுதலை செய்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பெருமகிழ்ச்சியளிக்கிறது. இத்தீர்ப்புக்காக சட்டப்போராட்டம் நடத்தி உழைத்திட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளும், பேரன்பும் என்று சீமான் தெரிவித்துள்ளார் (Seeman said, “My best wishes and blessings to all those who fought and worked hard for this verdict).