Lawyer fight: மீதி சில்லறை 1 ரூபாயை 4 ஆண்டு போராடி வாங்கிய வக்கீல்

மீதி சில்லறை 1 ரூபாயை 4 ஆண்டு போராடி வாங்கிய வக்கீல்
மீதி சில்லறை 1 ரூபாயை 4 ஆண்டு போராடி வாங்கிய வக்கீல்

Lawyer fight: பொதுவாக அரசு பஸ்களில் சில கண்டக்டர்கள் சில்லரை இல்லாவிட்டால் இறங்கு என்று சொல்வதுண்டு அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் பயணிகள் கண்டக்டரிடம் படாத பாடுபடுவபர்கள்.

இந்த சம்பவத்தில் நேர் மாறாக நடந்துள்ளது. கண்டக்டர் சில்லரை விவகாரத்தில் வக்கீலிடம் சிக்கி படாதபாடு பட்டு வழக்கு கோர்ட்டு வரை சென்று விட்டது.

தர்மபுரியை சேர்ந்த வக்கீல் சதாசிவம். இவர் கடந்த 22.8.2018 அன்று தர்மபுரியில் இருந்து தனது கிராமமான அரக்கனஹள்ளிக்கு செல்வதற்காக அரசு டவுன் பஸ்சில் ஏறி இருக்கிறார். தன்னுடன் தரை விரிப்பு, மேட் ஒன்றையும் எடுத்து சென்றுள்ளார்.

கண்டக்டர் பழனிசாமி டிக்கெட் எடுக்க கேட்டதும் அரக்கனஹள்ளிக்கு ரூ.18 கொடுத்து சதாசிவம் டிக்கெட் வாங்கியுள்ளார்.

அவர் வைத்திருந்த மேட்டுக்கும் லக்கேஜ் வாங்க வேண்டும் என்று கண்டக்டர் பழனிசாமி கூறியிருக்கிறார். அங்குதான் விவகாரம் தொடங்கி இருக்கிறது.

மேட்டுக்கு லக்கேஜா? அதெல்லாம் முடியாது என்று வக்கீல் சொல்ல… வாங்கி தான் ஆக வேண்டும் என்று கண்டக்டர் சொல்ல… வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

லக்கேஜ் டிக்கெட் வாங்கலைன்னா பஸ்சை விட்டு இறங்கு என்று கண்டக்டர் பழனிசாமி தனது பாணியில் பேசி இருக்கிறார். அதுதான் கடைசி பஸ் என்பதால் வேறு வழியில்லாமல் லக்கேஜ் வாங்க சம்மதித்து உள்ளார்.

லக்கேஜ் டிக்கெட் பயணிகள் டிக்கெட்டில் பாதி கட்டணம் ஆகும். அதன்படி ரூ.9 டிக்கெட்டுக்காக சதாசிவம் ரூ. 10ஐ கொடுத்துள்ளார்.

மீதி சில்லரை ரூ.1 இல்லை என்று கண்டக்டர் கூறி இருக்கிறார். ஆனால் வக்கீல் விடவில்லை. மீதி சில்லரை ரூ.1ஐ கொடு என்று கேட்டுள்ளார். அதற்கு கண்டக்டர் ரூ.9 கொடுத்து விட்டு நீ தந்த ரூ.10ஐ வாங்கி கொள் என்று கூறி இருக்கிறார்.

அதற்கு வக்கீல் என்னிடம் சில்லரை இல்லை என்று கூறியுள்ளார். என்னிடமும் சில்லரை இல்லை என்று கண்டக்டரும் கூறி இருக்கிறார். அப்போது கண்டக்டர் ஆத்திரத்தில் திட்டியதாக கூறப்படுகிறது.

ஆனால் அந்த ஒற்றை ரூபாயை வாங்காமல் விடக்கூடாது. பயணிகள் மத்தியில் அவமானப்பட்டதற்கும் பாடம் புகட்ட வேண்டும் என்று திட்டமிட்ட வக்கீல் சதாசிவம் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில் மேட்டுக்கு லக்கேஜ் கட்டணம் கிடையாது என்ற போக்குவரத்து கழக விதியையும் சுட்டிக்காட்டி நஷ்டஈட்டையும் சேர்த்து ரூ.60 ஆயிரத்து 10 வழங்க வேண்டும் என்று வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.

கண்டக்டர் தரப்பில் சின்ன விஷயத்தை பெரிது படுத்தி இருக்கிறார். சில்லரை இல்லாததால் தான் ரூ.1ஐ திருப்பி கொடுக்க முடியவில்லை என்று கூறப்பட்டது.

இந்த வழக்கு 4 ஆண்டுகளாக நீண்டது ஆனாலும் சதாசிவம் சளைக்காமல் சட்ட போராட்டத்தை தொடர்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் கண்டக்டர் பழனிசாமி ஒரு ரூபாய்க்காக மன உளைச்சலில் சிக்கியதை அறிந்து போன் மூலம் வக்கீலை திட்டி இருக்கிறார். அப்போது நீயே ஒற்றை ரூபாய் ஆள்தானே என்று திட்டியதாக கூறப்படுகிறது.

எல்லா ஆதாரங்களையும் கோர்ட்டில் தாக்கல் செய்து வழக்கை நடத்தி வந்த சதாசிவம் 4 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெற்றுள்ளர்.

நுகர்வோர் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பில் வக்கீலுக்கு ஏற்பட்ட அவமானத்திற்காக ரூ.10 ஆயிரம் மற்றும் சில்லரை ரூ.1ஐயும் சேர்த்து ரூ.10 ஆயிரத்து 1ஐ வக்கீலுக்கு வழங்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: Lip augmentation: அழகாக தெரிய செய்த முயற்சியால் பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்