Permission to rally of RSS : 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரணிக்கு அனுமதி வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: High Court orders permission to rally of RSS organization in 44 places : கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர், பல்லடம், அருமனை, நாங்குநேரி ஆகிய இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரணிக்கு அனுமதி இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

6 இடங்கள் தவிர காவல்துறை அனுமதி வழங்கிய 3 இடங்கள் உள்ளிட்ட 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரணி நடத்தலாம் (RSS organization can hold rally in 44 places). 6 இடங்களில் மட்டும் இயல்பு நிலை திரும்பும் வரை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு காத்திருக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உள்ளரங்கு கூட்டமாக பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் அரங்குகளாக இல்லாமல் விளையாட்டு திடல்களை தேர்ந்தெடுக்கலாம் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் (High Court Judge Ilandraiyan) தெரிவித்துள்ளார்.

பிஎஃப்ஐ அமைப்பின் தடையை தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்ற களேபரங்கள், மற்றும் விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் போட்டி பேரணி அறிவிப்பு உள்ளிட்ட காரணங்களால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரணிக்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அக்டோபர் 2ம் தேதி பேரணி நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை (Law and order problem) ஏற்பட வாய்ப்புள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அக்டோபர் 2 ஆம் தேதிக்கு பதிலாக நவம்பர் 6 ஆம் தேதி பேரணியை நடத்திக் கொள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் நவம்பர் 6 ஆம் தேதி பேரணி நடத்த அனுமதி வழங்குமாறும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறும் காவல்துறைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது (The police have also been ordered to make appropriate security arrangements).

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அணிவகுப்பு பேரணிக்கு அனுமதி தராத 47 இடங்களில் உளவுத்துறை அறிக்கைக்கு பின் உத்தரவு பிறப்பிக்கப்படும் (In 47 places orders will be issued after intelligence report) என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் (Naam Tamilar Party Coordinator Seeman) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசு, சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி பேரணிக்கு அளித்த தடையை நீதிமன்றம் நீக்கினால், அதனால் விளையக்கூடிய விரும்பத்தகாத செயல்களுக்கு யார் பொறுப்பேற்பது? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.