DY Chandrachood : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி. டிஒய் சந்திரசூட்

(DY Chandrachood) இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித். அவரது பணிகாலம் முடிந்த பிறகு, தலைமை நீதிபதியாக டிஒய் சந்திரசூட் பரிந்துரைக்கப்பட்டார்

புதுடெல்லி: : (DY Chandrachood) இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித். அவரது பணிகாலம் முடிந்த பிறகு, தலைமை நீதிபதியாக டிஒய் சந்திரசூட் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நடத்திய முழு நீதிமன்றக் கூட்டத்தில் இந்திய தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டை (Justice DY Chandrachood)தனது பணி நிறைவந்த பிறகு தலைமை நீதிபதியாக பரிந்துரைத்தார். முன்னதாக, தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித்தை, புதிய தலைமை நீதிபதியின் பெயரைப் பரிந்துரைக்குமாறும், நியமனத்திற்கான குறிப்பாணை செயல்முறையைத் தொடங்குமாறும் சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த பின்னணியில், நீதிபதி உதய் உமேஷ் லலித் (Justice Uday Umesh Lalit) தனக்கு அடுத்தப்படியாக தலைமை நீதிபதியாக சந்திரசூட்டின் பெயரை பரிந்துரைத்து கடிதம் அனுப்பியுள்ளார். இதன் காரணமாக, நீதிபதி சந்திரசூட், நவம்பர் 9ஆம் தேதி இந்தியாவின் ஐம்பதாவது தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய அவர், 2024 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதிய‌ன்று பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

நீதிபதி சந்திரசூட் அடுத்த தலைமை நீதிபதியாக இருப்பார் மற்றும் இந்திய தலைமை நீதிபதியாக இரண்டு ஆண்டுகள் பதவி வகிப்பார் (He will serve as the Chief Justice of India for two years). இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 124 இன் பிரிவு (2) இன் கீழ் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.மேலும்இந்தியத் தலைமை நீதிபதியின் நியமனம், அவசியமாகக் கருதப்படும்போது, ​​உச்ச நீதிமன்றத்தின் சம்பந்தப்பட்ட மற்ற நீதிபதிகளுடன் கலந்தாலோசித்த பிறகு குடியரசுத் தலைவரால் தலைமை நீதிபதி நியமனம் செய்யப்படுகிறார்.