Vikram’s next film in 3D: 3டி தொழில்நுட்பத்தில் விக்ரமின் அடுத்த படம்

சென்னை: Vikram’s next film in 3D technology. நடிகர் விக்ரமின் அடுத்த படம் 3டி தொழில்நுட்படத்தில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விக்ரம் திரைப்படத்துறையில் அறிமுகமாவதற்கு முன்பு 1988 ஆம் கைலாசம் பாலசந்தர் இயக்கிய கலாட்டா குடும்பம் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார் அதை தொடர்ந்து 1990 ஆம் ஆண்டு வெளியான என் காதல் கண்மணி என்னும் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின் குறைந்த பொருட்செலவில் ஆக்கப்பட்ட படங்களில் நடித்து வந்துள்ளார்.

இவர் நடிக்க தொடங்கி ஒன்பது வருடங்களுக்குப் பின் வெளிவந்த சேது என்னும் படத்தின் மூலம் திரையுலக ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். இப்படமே இவரின் திரை வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றது. இந்த வெற்றிக்குப் பின் தில், ஜெமினி, தூள், சாமி போன்ற படங்களில் நடித்தார்.

இவர் காசி எனும் படத்தில் பார்வை அற்றவராக நடித்து திரை விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றார். பின்னர் பிதாமகன் படத்தில் வெட்டியான் கதாப்பாத்திரத்தை தத்ரூபமாக வெளிக்கொணர்ந்து தேசிய விருது பெற்றார். அதன் பின் அந்நியன் என்னும் பிரம்மாண்டமான படத்தில் பிளவாளுமை குறைபாட்டுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பிராமணராக நடித்தார். இப்படம் பொருளவில் அதிக வருவாயும் நல்ல விமர்சனங்களையும் பெற்றுத் தந்தது.

அதன் பின் மஜா, பீமா, கந்தசாமி போன்ற படங்களில் நடித்து தன் திரைப் பயணத்தை தொடர்ந்தார். பிறகு ராவணன் என்னும் படத்தில் வீரையா என்னும் பழங்குடி இன போராளி கதாபாத்திரத்தில் நடித்துப் பாராட்டைப் பெற்றார். 2011 ஆம் ஆண்டு வெளி வந்த தெய்வத் திருமகள் என்னும் படத்தில் மனவளர்ச்சி குன்றியவராக இவரது நடிப்புத் திரை விமர்சகளிடமிருந்து பாராட்டுக்களைப் பெற்றது.

சமீபத்தில் வெளியான விக்ரம் நடித்த ‘கோப்ரா’ படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன் ஆகிய 2 படங்களிலும் விக்ரம் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. துருவ நட்சத்திரம் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ளார். படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும்வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் செப்டம்பரில் வெளியாகிறது.

இந்த நிலையில் நடிகர் விக்ரம் நடிக்கும் 61-வது படத்தை பா.ரஞ்சித் இயக்குகிறார். இந்த படத்தை 3டி தொழில் நுட்பத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளனர். இந்த படத்திற்கான பணிகள் தற்பாது துவங்கியுள்ளன. அடுத்த மாதம் முதல் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இது 19ம் நூற்றாண்டில் கோலார் தங்க வயலில் நடந்த ஒரு சம்பவத்தை மையமாக வைத்து தயாராகிறது.