TN CM met director Bharathiraja: இயக்குநர் பாரதிராஜாவை சந்தித்து முதல்வர் நலம் விசாரிப்பு

சென்னை: Tamil Nadu Chief Minister M. K. Stalin met director Bharathiraja and inquired after his well-being.. மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய இயக்குநர் பாரதிராஜாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன் மதுரைக்குச் சென்றிருந்த இயக்குநா் பாரதிராஜாவுக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்குள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றாா். இதனையடுத்து, தீவிர சிகிச்சைக்காக சென்னை, நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதய பாதிப்புகள் அவருக்கு இருப்பதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவா் மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டார். இந்த நிலையில் இயக்குநர் பாரதிராஜாவின் உடல் நிலை சீரானதையடுத்து அவர் வீடு திரும்பினார்.

இந்த நிலையில், திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பியதையொட்டி இன்று (10.9.2022) நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் விசாரித்தார்.

முன்னதாக, திரைப்பட இயக்குநர் பாரதிராஜா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் செய்தியறிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாரதிராஜா அவர்களின் மனைவியை தொலைபேசி வாயிலாக தொடர்புக் கொண்டு உடல்நலம் குறித்து விசாரித்தறிந்தார். தற்போது பாரதிராஜா அவர்கள் நலம் பெற்று இல்லம் திரும்பியதையடுத்து அவர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இச்சந்திப்பின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் உள்ளனர்.