Thiruchitrambalam movie: தனுஷ் பிறந்தநாளில் வெளியாகும் ‘திருச்சிற்றம்பலம்’

thiruchidrambalam-movie
தனுஷ் பிறந்தநாளில் வெளியாகும் ‘திருச்சிற்றம்பலம்’

Thiruchitrambalam movie: தனுஷ் பிறந்தநாளில் ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் வெளியாகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் நடிப்பில் கடைசியாக ‘மாறன்’ வெளியானது. இதனைத்தொடர்ந்து மித்ரன் ஜவகர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’, ‘வாத்தி’, ‘தி க்ரே மேன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் தனுஷ், ராம்குமாரின் ‘வால் நட்சத்திரம்’, மாரி செல்வராஜ் மற்றும் அருண் மாதேஸ்வரன் படங்களிலும் நடிக்க திட்டமிட்டுள்ளார். இதில், ‘திருச்சிற்றம்பலம்’ படத்தினை அடுத்ததாக திரைக்கு வெளிக்கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்தில், தனுஷுடன் ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களில் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின், படப்பிடிப்பு கடந்த வருடம் ஆகஸ்ட் 21-ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது.

இந்த நிலையில், ‘திருச்சிற்றம்பலம்’ படத்தினை தனுஷின் பிறந்தநாளான ஜூலை 28-ஆம் தேதி வெளியிட, படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் வரும் ஜூலை 28-ஆம் தேதி தனது 39-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். விவாகரத்திற்குப் பிறகு வரும் பிறந்தநாள் என்பதால் தனுஷை மகிழ்விக்கும்படியாக ’திருச்சிற்றம்பலம்’ ரிலீஸை திட்டமிட்டுள்ளனர். ரூஸோ சகோதரர்கள் இயக்கும் ‘தி க்ரே மேன்’ படமும் நெட்ஃப்ளிக்ஸில் வரும் ஜூலை 22-ஆம் தேதி வெளியாகிறது.

இதையும் படிங்க: Petrol Price: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்