‘Babli Bouncer’ trailer out: நடிகை தமன்னாவின் ‘பப்லி பவுன்சர்’ டிரைலர் வெளியீடு

சென்னை: Tamannaah Bhatia, Madhur Bhandarkar’s action entertainer ‘Babli Bouncer’ trailer out. நடிகை தமன்னா, மதுர் பண்டார்கர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பப்லி பவுன்சர்’ இந்தி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் ஜங்கிலி பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘பப்லி பவுன்சர்’ திரைப்படம் இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. மதுர் பண்டார்கர் இயக்கியுள்ளார். அமித் ஜோஷி, ஆராதனா தேப்நாத் மற்றும் மதுர் பண்டார்கர் ஆகியோர் கதை எழுதியுள்ளனர்.

இந்த படத்தில் தமன்னா நடித்துள்ளார்.செப்டம்பர் 23ம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகை தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் என்டர்டெய்னர் படமான ‘பப்லி பவுன்சர்’ இந்தி படத்தின் டிரெய்லரை தயாரிப்பாளர்கள் இன்று வெளியிட்டனர்.

2 நிமிடம் 30 வினாடிகள் நீளமுள்ள இந்த டிரைலரில், நடிகை தமன்னா பாட்டியா ஒரு வேடிக்கையான மற்றும் அதிரடி அவதாரத்தில் காணப்படுகிறார். ஏனெனில் அவர் ஒரு பெண் பவுன்சராக நடித்துள்ளார்.

‘பப்லி பவுன்சர்’ வட இந்தியாவின் உண்மையான ‘பவுன்சர் நகரமான’ அசோலா ஃபதேபூரில் அமைக்கப்பட்ட நகைச்சுவைத் தொனியுடன் வரும் வயதுக்கு வரும் ஃபீல்-குட் கதையாகப் பேசப்படுகிறது. பப்லி பவுன்சராக இதுவரை பார்த்திராத அவதாரத்தில் தமன்னா பாட்டியாவைக் காணலாம்.

மேலும் ‘பப்லி பவுன்சர்’ திரைப்படத்தில் சவுரப் சுக்லா, அபிஷேக் பஜாஜ் மற்றும் சாஹில் வைத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இதற்கிடையில், தமன்னாவின் மற்ற படமான ‘குர்துண்டா சீதகாலா’ அதே நாளில், (செப்டம்பர் 23ம் தேதியன்றே) திரையரங்குகளில் வர உள்ளது. நாகசேகர் இயக்கிய இந்த திரைப்படம் ஒரு காதல் திரைப்படமாகும். இதில் தென்னிந்திய நடிகர் சத்யா தேவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.