Sunny Leones Oh My Ghost Censored UA: சன்னி லியோன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

நடிகை சன்னி லியோன் நடித்துள்ள ஓ மை கோஸ்ட் என்ற பேய் (Sunny Leones Oh My Ghost Censored UA) திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை வடகறி என்ற படத்தில் குத்து பாட்டுக்கு சன்னிலியோன் நடனம் ஆடியுள்ளார். இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கொடுத்தது. இதனால் தமிழ், இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் நடிக்க தொடங்கினர்.

இந்நிலையில், கடந்த 13 ஆண்டுகளுக்குப் பின்னர் ஓ மை கோஸ்ட் என்ற பேய் படத்தின் மூலமாக தமிழில் மீண்டும் சன்னி லியோன் நடித்துள்ளார். இப்படத்தில் இரண்டு விதமான தோற்றங்களில் சன்னிலியோன் நடத்திருக்கிறார்.

மேலும், நடிகர்கள் சதீஷ், யோகிபாபு, திலக் ரமேஷ், தர்ஷா குப்தா, சஞ்சனா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்தை கே.வீரசக்தி, சசிகுமார் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை யுவன் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் சன்னிலியோன் பேயாகவும், அரண்மனையில் ராணியாகவும் இருந்து எதிரிகளை தும்சம் செய்துள்ளார். தற்போது இப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வெளியாகியுள்ளது. அதன்படி யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதனால் சிறுவர்கள் படத்திற்கு தனியாக செல்ல வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. அதுவும் பெற்றோர்களுடன் அனுமதி பெற்ற பின்னரே செல்ல வேண்டும். இப்படம் டிசம்பர் 30ம் தேதி வெளியாக இருக்கிறது.

முந்தைய செய்தியை பார்க்க:Football Fans Clash In Kerala: அர்ஜென்டினா வெற்றியால் கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் பயங்கர மோதல்

முந்தைய செய்தியை பார்க்க:Johnny Depp and Amber Heard Divorce Case: ஒரு வழியாக முடிவுற்ற ஜானிடெப், ஆம்பர்ஹெர்ட் வழக்கு