Prince movie : சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படத்தில் டிரைலர் வெளியீடு

சென்னை: Sivakarthikeyan starrer Prince trailer released : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியது. தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் தயாராகி உள்ள இந்த திரைப்படத்தை இயக்குநர் அனுதீப் இயக்கி உள்ளார். சிவகார்த்திகேயன் அடுத்ததாக அனுதீப் இயக்கி, இருமொழிகளில் உருவாகி உள்ள‌ ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் டிரைலர் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. அக். 21 ஆம் தேதி தீபாவளிக்கு இந்த திரைப்படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் திரைப்படம் ரிலீஸ்க்கு முந்தைய வியாபாரத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது (It has been well received in the pre-release business). அண்மையில் கிடைத்த தகவல்களின்படி, சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ ரிலீஸ்க்கு முந்தைய வியாபாரத்தில் கிட்டத்தட்ட ரூ.100 கோடி வரை வருவாய் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. திரைப்படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகள் சுமார் ரூ. 40 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் பதிப்பின் திரையரங்கு உரிமை ரூ. 45 கோடிக்கும், ஆடியோ உரிமை ரூ. 4 கோடிக்கும் விற்கப்பட்டதாக தெரிகிறது. பிர்ன்ஸ் திரைப்படத்தின் வெளியீட்டு பணியில் தயாரிப்பாளர்கள் ம்முரமாக பணியாற்றி வருகின்றனர்.

இருமொழிகளில் வெளியாக உள்ள இத்திரைப்படம் 9The film is released in two languages) இதுவரை ரூ. 90 கோடிகளை வசூலித்துள்ளது. அதே நேரத்தில் தெலுங்கு பதிப்பின் திரையரங்கு உரிமைகள் படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய வணிகத்தில் ரூ.100 கோடியைத் தாண்டியுள்ளது. எனவே, திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ரூ.100 கோடியை வர்த்தகத்தை எட்டும் முதல் திரைப்படமாக‌ சிவகார்த்திக்கேயனின் பிரின்ஸ் அமைந்துள்ளது என கூற‌ப்படுகிறது. மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் இதன் மூலம் முதல் இடத்திற்கு வலுவாக அடியெடுத்து வைத்து வருகிறார். சிவ‌கார்த்திகேயனின் முந்தைய‌ இரண்டு படங்களான ‘டாக்டர்’ மற்றும் ‘டான்’ பாக்ஸ் ஆபிஸில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்ததன் விளைவாக,அவரது பிரின்ஸ் திரைப்படத்திற்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ரொமாண்டிக், காமெடிக்கு முக்கியத்துவம் அளித்துள்ள‌ ‘பிரின்ஸ்’ படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷப்கா, சத்தியராஜ் (Sivakarthikeyan and Ukrainian actress Maria Ryaboshapka, Satyaraj) ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், மேலும் பல பிரபலமான முகங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார். மேலும் படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாக படத்தின் சென்னையில் விரைவில் ஆடியோ வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். தீபாவளியன்று சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ திரைப்படத்துடன் கார்த்தியின் ‘சர்தார்’ படமும் வெளியாக உள்ளது. இது தீபாவளிக்கு ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக அமைய உள்ளது.