Samantha AkshayKumar’s sensual dance: அக்‌ஷய் குமாருடன் ஆட்டம் போட்ட நடிகை சமந்தா!

சென்னை: Samantha AkshayKumar’s sensual dance: காபி வித் கரண் நிகழ்ச்சியில் ஒரு பாடலுக்கு நடிகர் அக்‌ஷய் குமாருடன் நடிகை சமந்தா நடனமாடியது ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளது.

நடிகை சமந்தா (Actress Samantha) தமிழ், தெலுங்கு திரைப்படங்கள் என பிசியாக நடித்து வருகிறார். தளபதி 67 திரைப்படத்தில், வில்லி கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவர் நடிக்கவில்லை என வதந்திகளுக்கு படக்குழுவினர் முற்றுப்புள்ளி வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து தற்போது பாலிவுட் (Bollywood) பக்கம் நகர்ந்துள்ளார். வெப் சீரிஸ் மற்றும் முன்னணி நடிகர்கள் ஜோடியாக என அடுத்தடுத்த ஹிந்தி படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

இந்நிலையில், கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் ‘காபி வித் கரண்’ (Koffee With Karan) நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை சமந்தாவும், அவருடன் அக்ஷய் குமாரும் கலந்துகொண்டனர். இதைத் தொடர்ந்து சமந்தா கவர்ச்சி நடனத்தில் சமீபத்தில் ரசிகர்களை கவர்ந்த ‘ஊ சொல்றியா மாமா’ (Oo Antava) பாடலுக்கு சமந்தா மற்றும் அக்ஷய் குமார் இருவரும் (Samantha AkshayKumar’s sensual dance) கலக்கலாக நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த ப்ரோமோவின் முழு எபிசோடு விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.