திருப்பதிக்கு திடீர் விசிட் அடித்த விக்னேஷ் சிவன் – நயன்தாரா

திருப்பதிக்கு திடீர் விசிட் அடித்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா
திருப்பதிக்கு திடீர் விசிட் அடித்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா

Nayanthara & Vignesh Shivan: நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது, நயன்தாராவுக்கும், அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் 6 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது விக்னேஷ் சிவன் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா, ஆகியோர் நடிப்பில் ‘காத்து வாக்குல இரண்டு காதல்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படம் இன்று (18.04.2022) அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார்.

அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து திருப்பதியிலிருந்து அதிகாலை 2.22 மணிக்கு ‘காத்து வாக்குல இரண்டு காதல்’ இன்றிலிருந்து உங்களுடையது என்று குறிப்பிட்டுள்ளார். காத்துவாக்குல படம் வெற்றிபெற வேண்டி இருவரும் திருப்பதிக்கு சென்று சாரி தரிசனம் செய்துள்ளனர் என்று ரசிகர்கள் பதிவிட்டு, இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

As Kaathu Vaakula Rendu Kaadhal releases, Nayanthara & Vignesh Shivan seek blessings at Tirupati temple

இதையும் படிங்க: AIADMK: சட்டப்பேரவையில் ஜெயலலிதா குறித்து விமர்சனம்