Rohini theatre: ரோகினி தியேட்டர் உரிமையாளர் மகன் மீது 2 பிரிவுகளில் வழக்கு

rohini-threater
ரோகினி தியேட்டர் உரிமையாளர் மகன் மீது 2 பிரிவுகளில் வழக்கு

Rohini theatre: ரோகிணி தியேட்டர் உரிமையாளர் மகன் ஓட்டிவந்த சொகுசு கார் மோதி சாலையில் நடந்து சென்ற நபருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு ரோகினி திரையரங்க உரிமையாளர் சாரங்கபாணியின் மகன் ரேவந்த்(26). இவர் நேற்றிரவு அடையாறு மேம்பாலம் முத்துலட்சுமி பூங்கா எதிரே சொகுசு காரில் வேகமாக சென்று கொண்டிருந்தபோது அவ்வழியே நடந்து சென்ற அடையாறு அருணாசலபுரம் பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநர் சோழிமுத்து(35) என்பவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சோழிமுத்து வலது கால் மற்றும் தொடை பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ரோகினி தியேட்டர் உரிமையாளர் மகனான ரேவந்த், அடிப்பட்ட சோழிமுத்துவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

இந்த சம்பவம் குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார், மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் வாகனங்களை ஓட்டுவது, பிறர் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதையும் படிங்க: சோனியா காந்தி விரைந்து குணமடைய வேண்டும்- பிரதமர் மோடி