Actress Nandini Rai in Varisu: வாரிசு படத்தில் பிரபல நடிகை நந்தினி ராய்

சென்னை: Actress Nandini Rai in Varisu. நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தில் பிரபல நடிகை நந்தினி ராய் நடித்துள்ளார்.

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது வாரிசு திரைப்படம். இதில் கதாயாகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, குஷ்பூ, ஸ்ரீகாந்த், ஷாம் ஆகியோர் நடித்துள்ளனர்.

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையொட்டி வெளியாகவுள்ள வாரிசு திரைப்படத்தை காண ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த மாத இறுதிக்குள் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, பின்னணி பணிகள் துவங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விஜய்யுடன் இணைந்து நந்தினி ராய் எனும் நடிகை நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நந்தினி ராய் 80 க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச பிராண்டுகளுக்கு மாடலிங் செய்துள்ளார். லண்டனில் இருந்து நிதித்துறையில் எம்பிஏ பட்டம் பெற்றவர். அவரது மாடலிங் காலத்தில், அவர் பல அழகுப் போட்டிகளில் வென்றுள்ளார்.

மிஸ் ஹைதராபாத் 2008, மிஸ் ஆந்திரப் பிரதேசம் 2010, மிஸ் பாண்டலூன்ஸ் ஃப்ரெஷ் ஃபேஸ் ஆஃப் ஏபி 2009 மற்றும் மிஸ் பியூட்டிஃபுல் ஐஸ் ஆஃப் ஏபி 2010 வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.