‘Bigg Boss Season-6’ contestants list released: ‘பிக் பாஸ் சீசன்-6‘ போட்டியாளர்களின் பட்டியல் வெளியீடு

சென்னை: ‘Bigg Boss Season-6’ contestants list released: தமிழில் ஒளிப்பரப்பாகும் ‘பிக் பாஸ்-6’ நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் மிகவும் பிரபலமான மற்றும் வெற்றிகரமான நிகழ்ச்சிகளில் ஒன்று ‘பிக் பாஸ் தமிழ்’ ஆகும். இந்நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் போட்டியிட்டுள்ளனர். போட்டியாளர்களுக்கு இடையேயான சண்டை பார்வையாளர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமானதாக அமைந்ததுள்ளது. முதல் சீசனில் நடிகை ஓவியாவின் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் இன்றும் ஓவியா ஆர்மி என செயல்பாட்டில் இருந்து வருகிறது. ஒவ்வொரு பிக் பாஸ் தமிழ் சீசன்களிலும் சில விஷயங்கள் நினைவில் இருக்கும்.

இந்த பிக் பாஸ் தமிழ் 6வது சீசன் நிகழ்ச்சியில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்று ஒரு வித்தியாசமான யோசனையுடன் வந்துள்ளது. நட்சத்திர பட்டம் தேவையில்லை, பிரபலங்களின் தொடர்பும் அவர்களுக்கு தேவையில்லை. ஒரு சாமானியராக, பிக் பாஸ் தமிழ் சீசன் 6ல் எந்த ஒரு தனி நபரும் பங்கேற்கலாம். பிக்பாஸ் தமிழ் சீசன் 6ல் சேர்வதற்கான நடைமுறை எளிதானது.

நீங்கள், VIJAY.STARTV.COM என்ற இணையத்தில் சென்று, பிக் பாஸ் சீசன் 6-ல் எந்த நோக்கத்திற்காக பங்கேற்க வேண்டும் என்பதைக் குறிக்கும் வீடியோவைப் பதிவேற்றவும். நீங்கள் தகுதி பெற்றால், நீங்கள் பிக் பாஸ் தமிழ் 6-ல் போட்டியாளராகலாம்.

‘பிக்பாஸ் சீசன் 6’ வீடுகள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வீடு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். இந்த ஆண்டு ரசிக்க வீட்டிற்குள் பல சிறப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பப்படும்.

மேலும் ‘பிக் பாஸ் தமிழ் 6’ போட்டியாளர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி, இந்த சீசனில் விஜயி டிவி தொகுப்பாளர் ரக்சன், சுசித்ராவின் முன்னள் கணவர் கார்த்திக்குமார், சூப்பர் சிங்கர் ராக லெட்சுமி, இசையமைப்பாளர் இமானின் முன்னாள் மனைவி மோனிகா, தொகுப்பாளினி டிடி, பாலிமர் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், சீரியல் நடிகை ஸ்ரீநதி, குக் வித் கோமாளி தர்ஷா குப்தா உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

கடந்த 5வது சீசனில் பாதியிலேயே விலகிய கமல்ஹாசன், இந்த சீசனை தொகுத்து வழங்க இருப்பதாகவும், அக்டோபர் 2 வது வாரம் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.