beast movie success party : தளபதி விஜய் கொடுத்த டிரீட்

beast movie success party
தளபதி விஜய் கொடுத்த டிரீட்

beast movie success party : நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனைவராலும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்படம் ஏப்ரல் 13 திரையரங்குகளில் வெளியானது.மேலும் இந்த படத்தின் வெற்றியை கொண்டாட விஜய் பீஸ்ட் பட குழுவினருக்கு விருந்து ஒன்றை கொடுத்துள்ளார்.

தற்போது இயக்குநர் நெல்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எங்களுக்கு விருந்து அளித்ததற்கு நன்றி விஜய் சார். மிகவும் ஜாலியான, மறக்க முடியாத மாலை வேளை எங்கள் அனைவருக்கும் இது அமைந்தது. விஜய் சார் அளித்த அன்புக்கும் ஆதரவுக்கும் இத்தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : sensex and nifty : இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

எங்களது அற்புதமான குழு இல்லாமல் இது நடந்திருக்காது. உங்களுடன் வேலை செய்வது இனிமையான அனுபவம். பல தடைகளைத் தகர்த்தெறிந்து எங்கள் மீது அன்பையும், ஆதரவையும் கொட்டிய ரசிகர்களுக்கும் நன்றி.

( beast movie success party given by vijay )