Actress Samantha : நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வதந்தி

தன் காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்த பின்னர் சினிமாவில் முழு வீச்சில் நடிக்கத் தொடங்கினார்

சென்னை: Actress Samantha is rumored to be hospitalized : நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வந்த செய்தி வதந்தி என்று சமந்தாவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தென்னிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக‌ வலம் வரும் சமந்தா (Samantha is the leading actress). கடந்த ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக தன் காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்த பின்னர் சினிமாவில் முழு வீச்சில் நடிக்கத் தொடங்கினார். குறிப்பாக புஷ்பா படத்திற்காக இவர் ஆடிய கிளாமர் நடனம் அனைவரையும் கவர்ந்தது.

பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் இருந்து சமந்தாவுக்கு பட வாய்ப்புகள் வந்தன‌. சமந்தா நடிப்பில் கடந்த நவம்பர் 11 ஆம் தேதி யசோதா திரைப்படம் வெளியானது (Samantha acted movie Yashoda was released on November 11). இப்படத்தில் வாடகைத் தாயாக‌ சமந்தா நடித்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வியாபார ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இந்தத் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி வீடியோவில் சமந்தா கண்ணீர் மல்க, தான் மயோசிடிஸ் என்கிற அரியவகை தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் (Suffering from a rare skin disease called myositis), இதற்காக கடந்த மூன்று மாதங்களாக‌ சிகிச்சை பெற்று வந்ததாகதவும், தற்போது தான் அதிலிருந்து படிப்படியாக குணமாகி வருவதாகவும் கூறி தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சமந்தா தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பதிவை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில், தற்போது நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின‌ (The news was published in the Telugu media and created a stir). அவருக்கு உடல் நிலை மோசமடைந்ததால் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக‌ கூறப்பட்டது. இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் அவர் விரைவில் நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்தனர்.

இந்நிலையில், நடிகை சமந்தா தற்போது ஹைதராபாத்திலுள்ள அவரது வீட்டில் ஒய்வில் இருக்கிறார் (Actress Samantha is currently resting at her home in Hyderabad). அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வந்த செய்தி வதந்தி என்று சமந்தாவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.