Actor Yogi Babu had a baby girl on Diwali: நடிகர் யோகி பாபு தம்பதிக்கு திபாவளியன்று பிறந்த பெண் குழந்தை

சென்னை: Actor Yogi Babu had a baby girl on Diwali. நடிகர் யோகி பாபு- பார்கவி தம்பதிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராகவும், மிகவும் பிஸியான நடிகராகவும் யோகிபாபு இருந்து வருகிறார். படத்தின் கதாநாயனுக்கான கால்ஷீட்டை எளிதாக பெற்று விடலாம். ஆனால் நடிகர் யோகிபாபுவின் கால்ஷீட் கிடைப்பது ரொம்ப கஷ்டமானதாக திரைத்துறையினர் சொல்லும் அளவுக்கு மிகவும் பிஸியானவராக இவர் இருந்து வருகிறார்.

முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் நடிக்கும் பெரும்பாலான படங்களில் யோகி பாபு இடம்பெற்று வருகிறார். வடிவேலுவுக்கு அடுத்தபடியாக, வசனங்கள் பேசும் முன்பாகவே பாடி லேங்குவேஜால் ரசிகர்களை சிரிக்க வைக்கும் அளவிற்கு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தும் திறமை யோகிபாபுவுக்கு அமைந்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டில் மட்டுமே யோகி பாபுவுக்கு 30 படங்கள் நடித்துள்ளதாக திரையுலகமே அதிரும் அளவுக்கு தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார் அவர். இதனைத்தொடர்ந்து கதாநாயகனகவும் சில படங்களில் நடித்த நிலையில் தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை கடந்த 2016-ல் வெளியான வில் அம்பு திரைப்படத்தை இயக்கிய ரமேஷ் சுப்ரமணியம் இந்த படத்தை இயக்கவுள்ளார்.

யோகி பாபுவுக்கும் பார்கவி என்பவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு விசாகன் என்றும் பெயர் வைத்துள்ளனர்.

இந்நிலையில் தீபாவளியான இன்று யோகிபாபு – பார்கவி தம்பதிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது என்ற தகவல் வெளியான நிலையில் ரசிகர்கள் அவர்களுக்கு ஏராளமான வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.