National Film Awards: பிறந்த நாளில் சூர்யாவுக்கு தேசிய விருது!

சூரரைப்போற்று திரைப்படத்தில் சூர்யா.

புதுடெல்லி: Announcement of 68th National Film Awards: சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது ‘சூரரைப் போற்று’ (Soorarai Pottru) திரைப்படம். சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவுக்கு (Actor Suriya) அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் (Covid Infection) காரணமாக குறைந்த திரைப்படங்கள் மட்டுமே ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. கடந்த 2020ம் ஆண்டில் தியேட்டர்களும் பல மாதங்களாக மூடப்பட்டிருந்தன. இதனால் தேசிய திரைப்பட விருதுகள் (National Film Awards) அறிவிப்பு தள்ளிப்போனது.

இந்நிலையில் 2020ம் ஆண்டிற்கான 68வது தேசிய திரைப்பட விருதுகள் (68th National Film Awards) அறிவிக்கப்பட்டுள்ளன. 30 மொழிகளில் இருந்து மொத்தம் 305 படங்கள் தேசிய விருதுக்கு அனுப்பப்பட்டன. இன்று அறிவிக்கப்பட்ட தேசிய விருதில், சிறந்த படத்திற்கான தேசிய விருதை (Best Film) சூரரைப்போற்று படமும், சிறந்த நடிகராக (Best Actor) அதேபடத்தில் நடித்த சூர்யாவும், சிறந்த நடிகைக்கான (Best Actress) அபர்ணா பாலமுரளியும் பெற்றுள்ளனர்.

அதுமட்டுமின்றி சூரரைப் போற்று படத்தில் இசையமைத்த ஜிவி பிரகாஷும் சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான (Best Background Score) தேசிய விருதை பெற்றுள்ளார். சிறந்த திரைக்கதை (Best Screenplay) என மொத்தம் 5 விருதுகளை சூரரைப்போற்று படம் அள்ளிக்குவித்துள்ளது.

மேலும் சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதை வசந்த் இயக்கிய ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படம் பெற்றது. அதேபோல், சிறந்த துணை நடிகைக்கான விருதை அந்தப் படத்தில் நடித்த லட்சுமி பெற்றிருக்கிறார். சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்தின் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தும் தேசிய விருது வென்றுள்ளார்.

நடிகர் யோகி பாபு (Actor Yogi Babu) நாயகனாக நடித்த மண்டேலா படத்திற்கு சிறந்த வசனம் மற்றும் அறிமுக இயக்குனருக்கான 2 விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது ‘அய்யப்பனும் கோஷியும்’ திரைப்படத்திற்காக நஞ்சம்மாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.