Actor and director Pratap Bothan : வயது மூப்பு காரணமாக நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் காலமானார்

மீண்டும் ஒரு காதல் கதை திரைப்படத்திற்கு அறிமுக இயக்குநர் பிரிவில் தேசிய விருதை பிரதாப் போத்தன் பெற்றார்.

Image Credit : Twitter. கோப்புப்படம்

சென்னை : Actor and director Pratap Bothan passed away : சென்னையில் உள்ள தனது இல்லத்தில் வயது மூப்பு காரணமாக நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன், தனது 70-வதாவ‌து வயதில் காலமானார்.

மலையாளத் திரைப்படத்துறையில் நடிகராக அறிமுகமாகி, பின்னர் தமிழ் திரைப்படங்களில் நடித்து, திரைப்படங்களை இயக்கிய நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தின் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் வயது மூப்புக் காரணமாக வியாழக்கிழமை இரவு (Thursday night) தூங்கிக் கொண்டிருந்தப்போதே, காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் 1952-ஆம் ஆண்டும் ஏப். 18-ஆம் தேதி பிறந்த பிரதாப் போத்தன், தன் பள்ளிக் கல்வியை ஊட்டியிலும், அதனைத் தொடர்ந்து தனது கல்லூரிப்படிப்பை சென்னையிலும் (College studies in Chennai) முடித்தார்.

ஆரம்பக் காலங்களில் நாடகங்களில் நடித்து வந்த பிரதாப்போத்தன், முதன்முறையாக மலையாளத் திரைப்படமான தகராவில் அறிமுகம் (Debut in movie Tagara ) ஆனார். அதனைத் தொடர்ந்து இயக்குநர் பாலு மகேந்திரா இயக்கத்தில் அழியாத கோலங்கள் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார்.

மூடுபனி உள்ளிட்ட 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள‌ பிரதாப் போத்தன், நடிகர் கமலஹாசன் (Actor Kamal Hasan), பிரபு, சத்தியராஜ், நெப்போலியன் உள்ளிட்டோர் நடித்துள்ள வெற்றி விழா, ஜீவா, சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட 12 படங்களை இயக்கி உள்ளார். நடிகர் திலகம் சிவாஜிகணேசனும் இவரது இயக்கத்தில் நடித்துள்ளார்.

1985-ஆம் ஆண்டு இவர் இயக்கி, நடித்த மீண்டும் ஒரு காதல் கதை திரைப்படத்திற்கு அறிமுக இயக்குநர் பிரிவில் தேசிய விருதை (National Award) பிரதாப் போத்தன் பெற்றார். பிரதாப் போத்தன் நடிகை ராதிகாவை திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து பெற்றார்.

பின்னர் அமலா சத்யநாத் என்பவரை திருமணம் செய்து, அவரையும் பிரிந்தார். பிரதாப் போத்தனுக்கு கேயா என்ற மகள் (daughter) உள்ளார். பிரதாப் போத்தன் மறைவுக்கு தமிழ், மலையாள மொழிகளைச் சேர்ந்த திரைத்துறையினர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Also Read : Actor and director Pratap Bothan : வயது மூப்பு காரணமாக நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் காலமானார்