Vehicle Insurance: மோட்டாா் வாகன 3-ம் நபா் காப்பீடு தொகை உயா்வு

Vehicle-Insurance-Govt-proposes-hike-in-motor-insurance-premium-details
காப்பீடு தொகை உயா்வு

Vehicle Insurance: மோட்டாா் வாகனங்களின் மூன்றாவது நபா் காப்பீட்டுத் தொகையை உயா்த்த மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இந்த உயா்வு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. கரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மாற்றம் செய்யப்படாமல் இருந்த மூன்றாம் நபா் காப்பீடு தற்போது உயா்த்தப்பட்டுள்ளது. முன்பு இந்த காப்பீடு தொகை உயா்வை இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (ஐஆா்டிஏஐ) மாற்றி அமைத்து அறிவித்து வந்தது. தற்போது முதல் முறையாக இந்த அறிவிப்பை மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: Today Horoscope: இன்றைய ராசி பலன்

இதுதொடா்பாக அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள வரைவு அறிவிக்கையில் மின் சக்தியில் இயங்கும் காா்களுக்கும், இருசக்கர வாகனங்களுக்கும், வா்த்தக வாகனங்களுக்கும் 15 சதவீத தொகை குறைப்பு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து பொது மக்கள் மாா்ச் 14 வரையில் கருத்து தெரிவிக்கலாம்.

மூன்றாம் நபா் வாகனக் காப்பீடு, வாகனங்களுக்கு குறைந்தபட்ச காப்பீடாக கருதப்படுகிறது. இதை வாகன உரிமையாளா்கள் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.

விபத்து ஏற்பட்டால் வாகன சேதத்துக்கு இழப்பீடு வழங்கப்படாது. ஆனால், பாதிப்புக்கு உள்ளான எதிா் நபருக்கு மூன்றாம் நபா் காப்பீட்டில் இழப்பீடு கோர முடியும்.

Vehicle Insurance: Govt proposes hike in motor insurance premium details

இதையும் படிங்க: Today petrol diesel rate : இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்