இனி ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்..!

Bank Strike : வங்கிகள் வேலை நிறுத்தம்
வங்கிகள் வேலை நிறுத்தம்

பொதுத்துறை வங்கிகளில் முன்னணி வங்கி எஸ்பிஐ. இந்த வங்கி தற்பொழுது தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இனி, ஏடிஎம்களில் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்காக எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் யோனோ ஆப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். இது எஸ்பிஐ ஏடிஎம்-கள், பிஓஎஸ் டெர்மினல்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சேவை மையங்காள் ஆகியவற்றிலும் இந்த ஆப்பினை பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த ஆப்பின் மூலம் 500 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரையில் அதிகபட்சம் எடுத்துக் கொள்ளலாம்.

எனினும் இந்த செயல்முறைக்கு உங்களது வங்கிக் கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அவசியம். இதனை வைத்திருந்தால் மட்டுமே உங்களால் டெபிட் கார்டு இல்லாமல் பணம் எடுக்க முடியும்.

டெபிட் கார்டு இல்லாமல் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்றாலும், இதனை முன்னதாக நீங்கள் பதிவு செய்திருக்க வேண்டும் என்பது அவசியம்.