இந்தியாவில் அறிமுகமானது மோட்டோ E32S ஸ்மார்ட்போன்

Moto E32s First Impression
இந்தியாவில் அறிமுகமானது மோட்டோ E32S ஸ்மார்ட்போன்

Motorola Moto E32s Smartphone: மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ E32s ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை ரூ. 9,299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜியோமார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

மோட்டோரோலா மோட்டோ E32s ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மோட்டோரோலா மோட்டோ E32 போன்றே உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்லேட் கிரே மற்றும் மிஸ்டி சில்வர் ஆகிய இரு வண்ணங்களில் கிடைக்கிறது.

மோட்டோரோலா மோட்டோ E32s வலதுபுறத்தில் வால்யூம் ராக்கரைக் கொண்டுள்ளது, பவர் பட்டனுடன் கைரேகை ஸ்கேனரும் இணைக்கப்பட்டுள்ளது. இடது பக்கத்தில் ஒரு சிம் ட்ரே உள்ளது. இதன் கீழ் பகுதியில் மைக்ரோஃபோன், ஸ்பீக்கர் கிரில் மற்றும் சார்ஜ் செய்வதற்கான யு.ஸ்.பி. டைப் சி போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

மோட்டோ E32s மாடலில் 6.5-இன்ச் HD+ IPS LCD பேனலைக் கொண்டுள்ளது. மேலும் இது 3GB/4GB ரேம் மற்றும் 32GB/64GB மெமரி வெரியன்டில் கிடைக்கிறது. ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ G37 பிரசாசர் கொண்ட மோட்டோ E32s ஸ்மார்ட்போன் 5,000mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

Motorola’s new affordable smartphone moto e32s launched in India

இதையும் படிங்க: கள்ளநோட்டுக்களை வீட்டிலேயே அச்சடித்த நபர் கைது