Indian Exports: புதிய உச்சத்தை எட்டிய இந்திய ஏற்றுமதி – மத்திய அரசு தகவல்

புதிய உச்சத்தை எட்டிய இந்திய ஏற்றுமதி
புதிய உச்சத்தை எட்டிய இந்திய ஏற்றுமதி

Indian Exports: 2021 ஏப்ரலில் இருந்து 2022 மார்ச் வரையில் இந்தியாவின் சேவைத்துறையின் ஏற்றுமதி அளவு 25 ஆயிரம் கோடி டாலராக இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. 2021-22 நிதியாண்டை விட இது 21.31% அதிகமாகும்.

பண்டங்கள் மற்றும் சேவைகளின் மொத்த ஏற்றுமதி கடந்த நிதியாண்டை விட 2021-22-ல் 34.50% அதிகரித்து 66 ஆயிரத்து 965 கோடி டாலராக உயர்ந்துள்ளது. 2022 மார்ச் மாதத்தில் மொத்த ஏற்றுமதி கடந்த ஆண்டை விட 15.51% அதிகரித்து 6,475 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

2021-22-ல் மொத்த இறக்குமதி கடந்த ஆண்டை விட 47.8% அதிகரித்து 75,668 கோடி டாலராக அதிகரித்துள்ளது. மொத்த ஏற்றுமதி அளவிற்கும், மொத்த இறக்குமதி அளவிற்கும் இடையே உள்ள வேறுபாடான வர்த்தக பற்றாக்குறை அளவு 2021-22-ல் கடந்த நிதி ஆண்டை விட 518.87% அதிகரித்து 8,703 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக சுற்றுலாத்துறை, விமான போக்குவரத்து துறை உள்ளிட்ட சேவைத்துறைகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தும் சேவைத்துறை ஏற்றுமதி அளவு இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: TN Schools: விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுத்தால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- பள்ளிக்கல்வித்துறை