Future Group: பியூச்சர் நிறுவனத்தின் இணைப்பை செயல்படுத்த முடியாது- ரிலையன்ஸ்

பியூச்சர் நிறுவனத்தின் இணைப்பை செயல்படுத்த முடியாது
பியூச்சர் நிறுவனத்தின் இணைப்பை செயல்படுத்த முடியாது

Future Group: பியூச்சர் குழுமத்தை ரிலையன்ஸ் வாங்க இருப்பதாக திட்டமிட்டது. கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. ரூ.24,713 கோடி அளவுக்கு இந்த இணைப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பியூச்சுர் குழுமத்துக்கு கடன் கொடுத்த நிறுவனங்கள் ரிலையன்ஸ் உடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் இந்த இணைப்பை செயல்படுத்த முடியாது என ரிலையன்ஸ் அறிவித்திருக்கிறது.

பியூச்சர் குழுமத்தின் 19 துணை நிறுவனங்கள் ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் உடன் இணைக்க இருப்பதாக இரு ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் அமேசான் நிறுவனத்துக்கும், பியூச்சர் குழுமத்துக்கும் இடையேயான ஒப்பந்தம் காரணமாக ரிலையன்ஸ் குழுமம் பியூச்சர் குழுமத்தை வாங்க முடியாது என அமேசான் வழக்கு தொடுத்தது. இது தொடர்பான வழக்கு இந்தியா மற்றும் சிங்கப்பூர் நீதிமன்றங்களில் நடந்தன.

பியூச்சர் குழுமத்தின் சில 100 ஸ்டோர்களின் செயல்பாட்டை கடந்த பிப்ரவரி மாதம் ரிலையன்ஸ் கையகப்படுத்தியது. பியூச்சர் குழுமத்தின் பங்குதாரர்கள் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைவதற்கு ஆதரவாக ஓட்டளித்திருக்கின்றனர். ஆனால் பியூச்சர் குழுமத்துக்கு கடன் வழங்கிய நிறுவனங்கள் ரிலையன்ஸ் உடன் இணைவதற்கு எதிராக ஓட்டளித்திருக்கின்றன. இதனால் இந்த இணைப்பு நடக்காததால் திவால் நடைமுறையின் கீழ் பியூச்சர் குழுமம் வரும் என இந்த துறையை சேந்தவர்கள் தெரிவிக்கின்றனனர். அமேசான் மற்றும் ரிலையன்ஸ்க்கு இடையேயான போட்டியில் பியூச்சர் குழுமத்துக்கு எதிர்காலம் இல்லை என்ற சூழலாக இருக்கிறது.

After lenders disapproval, RIL calls off ₹24,713-cr deal with Kishore Biyani’s Future Group

இதையும் படிங்க: LIC Board: 3.5 சதவீத பங்குகளை வெளியிட எல்.ஐ.சி. இயக்குநர் குழு அனுமதி